பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


400 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அரவிந்தகோஷ் இரண்டாண்டுகள் தார்ஜிலிங் நகரில் தங்கிப் படித்தார். தந்தை கிருஷ்ணதன்கோஷ் தனது மனைவி யுடனும் மகன் அரவிந்தனுடனும், மனைவி சொர்ணலதாவுடனும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா சென்றார். அந்தப் பயணத்தின்போதுதான்் அரவிந்தகோஷின் கடைசி தம்பியான பாரீந்திர கோஷ் பிறந்தார்.

ஐரோப்பிய பயணம் மேற்கொண்ட டாக்டர் கிருஷ்ணதன் கோஷின், அருமை நண்பரொருவர் மாஞ்செஸ்டர் என்ற நகரிலே இருந்தார். அவர் பெயர் எக்ரோய்ட் என்பதாகும். கிறிஸ்துவ மதத் தொண்டிலே ஈடுபட்ட ஒரு பாதிரியார். அவரிடத்திலே அரவிந்தருடைய கல்வி கற்கும் பொறுப்பை ஒப்படைத்தார் - டாக்டர் கிருஷ்ணதன்!.

அரவிந்த கோஷ9ம், தனது தந்தையின் அருமை நண்பரும், மத சார்பான பாதிரியாருமான எக்ரோய்ட்டுடனும் அவரது குடும்பத்தாருடனும் ஒன்று கலந்த அன்பராகி விட்டார். அதனால், அரவிந்தரை அழைத்தவர்களில் பலர் அரவிந்தரை அன்புடன் அழைத்தபோது, எக்ரோய்ட் அரவிந்தகோஷ் என்றே அழைத்தார்கள். அரவிந்தரும் அதைப் பெருமையாக ஏற்றுக் கொண்ட பின்பு, தனது பெயரை அவரும் ஏ.ஏ.கோஷ் என்றே எழுதுவார்.

அரவிந்தர் மாஞ்செஸ்டர் நகரில் வளர்ந்தார். டாக்டர் கிருஷ்ணதன் தனது பிள்ளைகள் மூன்று பேரையும் ஒரே இடத்தில் தங்கிப் படிக்க வைக்க விரும்பவில்லை. ஒவ்வொரு மகனையும் ஒவ்வோரிடத்தில் படிக்க வைத்தார்!

அரவிந்தருடைய தந்தையார் டாக்டர் கிருஷ்ணதன் கோஷ், ஆங்கிலேயர்களைப் போலவே, உணவு, உடைகள் ஆகியவற்றைப் பின்பற்றுவார். அவருக்கு மேனாட்டு மோகம் அதிகம் உண்டு. ஆனால், அரவிந்தருக்கு ஆங்கிலேயர்கள் இடையே அதிகம் பழக்க வழக்கம் இருந்ததென்னமோ உண்மைதான்். ஆனால், என்றும் அவர் மேனாட்டு நாகரிக மோகத்துக்கு அடிமையானதில்லை.