பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி {{};

சிறுவயது முதலே அரவிந்தகோஷ9க்கு ஆடம்பரம், படாடோபம், தற்பெருமை, ஆகியவற்றில் நாட்டமேதும் கிடையாது. பள்ளிக் கல்வி உண்டு, அவருண்டு என்ற நோக்கத்திலேயே. அவர் நடந்து வந்தார்.

எக்ரோய்ட் என்ற பாதிரியார் வீட்டில் அரவிந்தகோஷ் தங்கி நான்கு ஆண்டுகள் கல்வி கற்றார். 1885-ஆம் ஆண்டில் இலண்டன் நகரிலே உள்ள செயிண்ட் பால் பள்ளியில், தனது பதின்மூன்றாம் வயதில் அரவிந்தர் கல்வி கற்கச் சேர்ந்தார்.

இந்த வயதுக்குள்ளேயே, பாதிரியார் வீட்டில் தங்கிப் படித்திருந்த நேரத்தில், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் அரவிந்தர் புலமையாளரானார். ஜெர்மன், இத்தாலி மொழிகளையும் புரிந்து கொள்ளுமளவுக்குக் கற்றார்.

எந்த மொழிகளது இலக்கியமாக இருந்தாலும், அவற்றை அவர் ஊக்கமுடன் படித்து உணர்வார். ஏனென்றால், மற்ற மொழிகளது இலக்கியத்தின் புதைப் பொருட்களைத் தோண்டி எடுத்து அவற்றின் அறிவுரைகளை உணர்ந்திட அவர் பெரிதும் விரும்பினதேயாகும்.

இவ்வாறெல்லாம் அவர் பிற இலக்கியங்களை விரும்பிக் கற்றதால்தான்், அவருடைய இலக்கிய ஆற்றல் முதிர்வடைந் திருந்தது. இல்லையானால், தனது பதிநான்காம் வயதிலே அவர் எழுதிய 'குயில் என்ற கவிதையை அறிஞருலகம் வியந்து போற்றிப் பாராட்டியிருக்குமா?

இலண்டன் மாநகர் பள்ளியில் இவ்வாறாகத் தொடர்ந்து கல்வி கற்று வந்த அரவிந்தர், தனது பதினெட்டாம் வயதில், உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற்றார். மதிப்பெண்கள் அதிகம் வாங்கியதால் அதற்குரிய உபகாரச் சம்பளமும் பெற்றார்.

அதற்குப் பிறகு கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்து கவனத் தோடும் - அக்கறையோடும் தொடர்ந்து அவர் படித்து வந்ததால், இரண்டாண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்வில் அரவிந்தர் சிறப்புத் தகுதியுடன் தேறினார்.