பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 103

அரவிந்தர் வரும் அன்றைய தேதி கப்பலில் அவர் ஏறவில்லை. காரணம், அந்தக் கப்பல் வழியிலேயே கடலில் மூழ்கி விட்டது.

மகன் வந்த கப்பல் மூழ்கி விட்டதை அறிந்த டாக்டர் கிருஷ்ணதன் கோஷ் மிகவும் பதறினார் கப்பல் கம்பெனிக்குத் தந்தி கொடுத்து கப்பல் மூழ்கியது உண்மைதான்ா என்று அவர் கேட்டார்.

கப்பல் மூழ்கி விட்டது உண்மைதான்் என்று அந்தக் கம்பெனி கூறியதைக் கேட்டுத் திடுக்கிட்டு, மகன் கப்பலோடு நீரில் மூழ்கி விட்டார் என்று நம்பி அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து புரண்டுக் கதறினார்.

நான்கு நாட்கள் மயக்கநிலையிலே இருந்தார். பிறகு நினைவு திரும்பாமலேயே தந்தை - மகன் என்ற பாசத்தோடே அவர் இறந்து விட்டார்.

ஆனால், கடலில் மூழ்கிய கப்பலில் அரவிந்தர் இல்லை என்ற தகவல் பிறகுதான்் எல்லாருக்கும் தெரிந்தது. இந்த உண்மை தெரி வதற்குள் டாக்டர் கிருஷ்ணதன்கோஷ் இறந்து விட்டாரே, பாவம்!

அரவிந்த கோஷின் தந்தை மேனாட்டு நாகரிக மோகியாகவே வாழ்ந்தார்! ஆனால், மக்களுக்கு உதவும் வள்ளலாகவும் இருந்தார், தனது மக்கள் மாவட்டக் கலெக்டராக, மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றும் பெருமையும் புகழும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார்! அவர் ஆசை தோல்வி கண்டுவிட்ட ஏக்கத்தோடு, பரிதாபமாக மகன் பாசத்தோடேயே மாண்டார்.

எங்கெங்கு இடம் மாற்றம் பெற்ற டாக்டராக அவர் செல்கிறாறோ, அங்கங்கே உள்ள மக்களிடம் எல்லாம் ஆபத்துக்கு உதவும் ஆபத் சாகாயர் என்ற பெயரையே அவர் பெற்று வந்தார். ஒரு தர்மவானாகவே புகழ் பெற்றார்.