பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11

மனிதப் பிறவியோ! தெய்வப் பிறவியோ!

பரோடா சமஸ்தான்த்து அரண்மனையில் அரவிந்த கோஷ் மன்னரைக் கண்டார். இலண்டனிலிருந்தபோதே மன்னரிட்ட உத்தரவிற்கேற்ப, அரவிந்தருக்கு சமஸ்தான்த்து அரசு பணி வழங்கப்பட்டது. அந்த வேலையை மிகத் திறமையுடன் செய்து வந்ததால், மன்னர் அவரைத் தனது நேர்முக உதவியாளராக அமர்த்திக் கொண்டார்.

சிறிது காலம் கடந்த பின்பு, அரவிந்தரது கல்விக் கேற்றவாறு, பரோடா கல்லூரியின் பேராசிரியராக மன்னர் நியமித்தார். அவரது பன்முக ஆற்றலைக் கண்ட கல்லூரி நிர்வாகிகள், அவரை உதவி முதல்வராக நியமித்தார்கள்.

பரோடா மன்னர் முதல் - கல்லூரிப் பேராசிரியர்கள், நிர்வாகப் பிரிவு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாணவர்கள் ஆகிய அனைவரும் - அரவிந்தரின் அறிவுக்கூர்மை, மதிநுட்பம், ஒழுக்கம் ஓம்பல், தனித்தியங்கும் தன்மை, கல்வி ஆழத்தின் வளமை, பழகும் தன்மைகள், தினந்தோறும் நூல்களைப் படித்தல், ஆய்தல், பாடபோதனை விளக்கங்கள் ஆகிய