பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# G ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

திறமைகளால் கவரப்பட்டார்கள். அரவிந்தகோஷை ஒவ்வொரு வரும் அவரது அறைக்கு வருகை தருவர். அவரைப் பாராமல் இருப்பவர் ஏதோ ஓரிருவராகத்தான்் இருப்பார்கள். அந்த அளவுக்கு அரவிந்தரும் அவர்களால் ஈர்க்கப்பட்டார்.

பரோடா மன்னர் கெய்க்வார், வாரம் இருமுறை, மும் முறையாவது அவரை தன் இருப்பிடத்துக்கு வரவழைத்துப் பேசுவார். யாரிடமும் தாராளமாகப் பழகாத நாணுடையவர் அவர் என்பதை மன்னர் அறிவார். அதனால், அரசர் அழைத்ததும் அரவிந்தர் வரவில்லையென்றால், அதற்காக அவர்மீது மன்னர் கோபப்பட மாட்டார். ஏனென்றால், அவர் அரசர் மட்டுமல்லவே, கற்றார் அல்லவா? அதனால் அவர் காமுறுவார்.

அரவிந்தர் பாடம் நடத்தும்போது மாணவர்கள் அவர் குறிப்பிலே, முகபாவனைகளிலே, சொல்வள விளக்கங்களிலே ஒன்றி விடுவார்கள். ஒரு நாளைக்குப் பாடம் நடத்திடக் அவர் கல்லூரிக்கு வரத் தவறினால், வேறு ஆசிரியர்களிடம் அந்தப் பாடத்தைக் கேட்க மாணவர் விரும்ப மாட்டார்கள்! ஏன் வகுப்புக்கே மட்டம் அடித்து விடுவார்கள். அரவிந்தர் மீது அவ்வளவு குரு பக்தி; பாசம் நேசம், மரியாதை மாண்பு.

எனவே, பரோடா கல்லூரி வாழ்க்கை அரவிந்த கோஷஇக்கு ஒர் அறிவு மறுமலர்ச்சி வாழ்வாக அமைந்து விட்டது.

மாணவர்கள் மேலை நாட்டு நாகரிக உடைகளோடு கல்லூரிக்கு வருவார்கள். ஆனால், அரவிந்தர் இலண்டன் நாகரிக வாழ்க்கை யோடு வாழ்ந்து வந்தவர். அவர், இந்திய நாகரிகத்தையும், பண் பாட்டையும் மக்கள் வாழ்க்கை முறை களையும் அறியாதவராகவே இருந்தார். குறிப்பாகக் கூறு வதான்ால், அவரது தாய் மொழியான வங்காள மொழியையே மறந்து விட்டார்! மறந்து விட்டார் என்பது கூடத் தவறு. வங்கமொழியே அவருக்குச் சரிவரப் பேச வராது.

மேல் நாடுகளின் இலக்கியங்கள், கவிதைகள், தத்துவங்கள், வரலாறுகளில் அவர் புலமைப் பெற்றதைப் போலவே, இந்தியத் தத்துவங்கள், வரலாறுகள், மொழி வளங்கள்,