பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 111

கவிதைகள், இலக்கியங்கள் அனைத்திலும் ஆழ்ந்த புலமை பெற வேண்டு மென்று விரும்பினார்! அதற்கான ஆசிரியர் களைத் தேடிப் பிடித்துப் பரோடாவிலேயே பயிற்சி பெற்றார்.

முதலில் தனது தாய் மொழியான வங்க மொழியை வளமாகக் கற்க விரும்பிய அரவிந்தர், வங்காள எழுத்தாளரான தீனேந்திர குமார் ராய் என்பவரிடம் வங்க மொழியைக் கற்றார்.

தீனேந்திர குமார் ராய், அரவிந்தரைப் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். அந்த நூலில் அவர் எழுதியுள்ள அன்பு உரைகளைக் கீழே தருகின்றோம். இதோ அந்த ஆய்வுரை :

'அரவிந்த கோஷ9டன், நான் இருந்த வரையில் அவர் பிரம்மசர்ய ஒழுக்கத்தையே கடைப்பிடித்தார். மற்றவர்கள் துன்பப்படுவதைக் கண்டு அவரும் துன்புறுவார். ஒரு துறவியைப் போலவே அவர் வாழ்ந்தார்? அவரும் ஒரு நோன்பைக் கடைப்பிடித்தார் என்ன நோன்பு தெரியுமா அது?

'அறிவை திரட்டுவதுதான்் அவர் நோன்பு. இந்த நோன்பை நோற்க அவர் அலுவலும் அல்லலும் மிக்க உலகில் உள்ளவாறே, கடுந்தவம் இயற்றிக் கொண்டிருந்தவர் அரவிந்த கோஷ்!

இத்தகைய ஒர் அறிவும் அன்பும் செறிந்த மனிதரை, தீனேந்திர குமார், பரோடாவில் தான்் முதன் முதலாகப் பார்த்தார். அரவிந்த கோஷ் அழைப்பை ஏற்று அவரைப் பார்க்க வந்தபோது அந்த ஆசிரியர் என்ன எண்ணினார் தெரியுமா?

அரவிந்தர் இலண்டனிலேயே தனது கல்விக் காலத்தைக் கழித்தவரல்லரா? அதனால் அவர், சூட்டும் பூட்டும் கோட்டும் ஹாட்டுமாய்த்தான்் காட்சி தருவார் என்று எண்ணினேன். இலண்டனிலே இருந்து இந்தியா வருபவர்களைப் போலப் பகட்டாக, படாடோபமாக, தடபுடலாகவே இருப்பார் என்று எதிர்பார்த்து வந்தேன். ஒரே ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் அரவிந்த கோஷைப் பார்த்து வியப்படைந்தேன்.

'முதன் முதலில் அரவிந்தகோஷைச் சந்தித்தபோது, அவர் பட்டிக்காட்டுச் செருப்பும், ஆமதாபாத் துணியாலையில் தயாரான