பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 1 #3

சம்பளத்தில் பெரும் பகுதிப்பணம் இலண்டனிலே இருந்து புத்தகம் வரவழைத்துப் படிக்கவே செலவாகும். உறவினர் களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்ப வேண்டிய பணத்தை மறக்காமல் அனுப்பி விடுவார். என்ன காரணம் தெரியுமா?

இலண்டனிலே அரவிந்தர் படிக்கும்போது, அவரது தந்தையார் குறிப்பிட்டக் காலத்தோடு பணத்தை அனுப்ப மாட்டார். தர்மங்களைச் செய்து விட்டுப் பிறகு பணம் கிடைக்கும்போது அனுப்புபவரல்லரா? அப்போதெல்லாம் பணத்துக்காக அவர் பட்ட கஷ்டங்களை எண்ணிப் பார்த்து, பிறரும் அத்தகைய துன்பங்களைப் படக்கூடாது என்பதற் காகவே, மாதம் தவறாமல் தான்் அனுப்ப வேண்டிய பணங்களை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அரவிந்தர் அனுப்பி விடுவார்.

அரவிந்தரை நம்பியவர்களை அவர் ஒருபோதும் கைவிடும் வழக்கமில்லை. எப்பாடுபட்டாவது அவரவர் கஷ்டங் களுக்குப் பயன்படும் வகையில் பணத்தை அனுப்பிடத் தவறார்.

அரவிந்தரின் வங்காள மொழி ஆசிரியர் மேலும் என்ன கூறுகிறார் - அவர் புத்தகத்தில்? படிப்போமே அதையும்?

'பரோடா அரசவைக்குச் செல்லும்போதுகூட, அரவிந்தர் எளிய ஆடையை மாற்றிக் கொள்ள மாட்டார். விலையுயர்ந்த செருப்பு, டை, காலர், பிளானெல், லினன், பல வகைக் கோட்டுகள், தலையணிகள் இவற்றைப் பற்றி அவர் எப்போதும் அக்கறை கொண்டதே இல்லை.

'ஒரு நாள்கூட அவர் தொப்பி அணிந்ததை நான் பார்த்த தில்லை. வங்காளத்தில் அல்லது பரோடா பகுதிகளில் சாதாரண மக்கள் சகஜமாக அணியும் தொப்பியையே அரவிந்தரும் அணிந்து செல்வார்.

அரவிந்தர் படுக்கைகூட, மிகச் சாதாரணமானதுதான்். முப்பது ரூபாய் சம்பளம் பெறுபவன்கூட, அவர் படுத்த இரும்புக் கட்டிலில் படுக்க மாட்டான், மென்மையான பெரிய மெத்தைகளில் படுத்துறங்கும் பழக்கம் அவரிடம் கிடையாது.