பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 +6 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

உண்மை என்னவெனில், இவைகளை எல்லாம் மன்னரிடம் பெற அவருக்கு நேரமில்லை. சித்தம் போக்கு சிவம் போக்கு என்று வாழ்க்கையை நடத்தி வந்தார். வாழ்க்கையை அவர் சுவைத்தால்தான்ே, அதன் அருமையை நாடுவார்; தேடுவார்?

அரவிந்தர் வீடே புத்தக அம்பாரக் குவியலாக இருக்கும் போது, பிரெஞ்சு, ஜெர்மன், இங்லிஷ், கிரீக், லத்தீன், ருஷ்ய மொழி நூல்கள் எல்லாம் அந்தந்த நாட்டின் புதுப்புது வெளியீடுகளோடு வந்து குவியும். அவை ஸ்டீல் ட்ரங்குப் பெட்டிகளில், அலமாரிகளில், வீட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும்.

இவ்வளவு புத்தகங்களையும் தவறாமல் தினந்தோறும் படிப்பார். வாரம்தோறும் ரயிலில் கப்பலில் வரும் புத்தகங்களை எல்லாம் பொருள் வாரியாகப் பிரித்து வைத்துக் கொண்டு, அந்தந்த வகை வாரியாக அவற்றை வாரந்தோறும் படிப்பதுடன், தேவையான குறிப்புகளையும் எழுதி வைத்துக் கொள்வார் அரவிந்தர்.

அரவிந்தரது குருவான தீனேந்திர குமார் தனது புத்தகத்தில், 'அரவிந்தகோஷைப் போல ஒரு வாசகரை நான் பாத்ததில்லை” என்று எழுதுகிறார்.

புத்தகங்கள் படிப்பு, கல்லூரி பாட போதனை போன்ற செயல்களைச் செய்யவே அவருக்கு நேரம் சரியாக இருக்கும். எனவே, எந்தவித வகையான பொது மக்களிடமும் பழக, பேச அவருக்கு நேரமும் இல்லை.

எனவே, அவரது நண்பர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அவ்வளவுக் குறைவானவர்களே அவரது நண்பர்கள்.