பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


事领 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

இந்த உலகத்தில் அவர்களது புதிய உருவாக்கம் வெளிப் படும் வரை, அதிமானசம் என்ற மேன்மை மிக்க மனித தெய்வ வாழ்க்கை தோன்றும் வரை, தேவர் குலம் இந்த உலகத்தில் தழைத்தோங்கும் வரை, அவர்கள் அயர மாட்டார்கள் என்பது உறுதி. ஆனால், இந்த இலட்சியங்கள் உலகத்தில் தோன்றுமா என்று சிலர் நினைக்கலாம் என்று ஏற்படும் இந்த தெய்வீக சக்தி, இனம் என்றும் சிலர் எண்ணலாம்.

ஞானி அரவிந்தர் அவர்களின் மா தவத்தாலும், அன்னை அவர்களின் தெய்வீக மன சக்தியாலும், தளராத உழைப்பாலும், அந்த தெய்வப் பிறவிகளின் இடைவிடாத முயற்சிகளது உழைப்பாலும், இந்த இலட்சியங்களின் நிறைவேற்றம் நுண்ணுலகில் 1958-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ஆம் நாள் திடீரென வெளிப்பட்டது. அப்போது தெய்வீகத் தாயான திரு. அன்னை அவர்கள் கூடியிருந்த மக்கள் திருத் திரள் முன்பு, புதியதோர் உலகம் பிறந்து விட்டது என்று, பகிரங்கமாகப் பிரகடனப் படுத்தினார்.

அவர் அவ்வாறு பிரகடனப் படுத்திய சம்பவம் நமது கண்களுக்குத் தெரியவில்லை; செவிகளில் தென்படவில்லை. என்றாலும், மகா பாரதப் போர் குருசேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றபோது, கண்ணபெருமான், வில் வித்தகனான அருச்சுனனுக்கு கீதையை உபதேசம் செய்து கூறியதாவது :

'அருச்சுனா நான் இந்த போர் வீரர்களை எல்லாம் உனக்கு முன்பேயே கொன்று விட்டேன் : நீ இந்த போர்ப் பணிக்குரிய வேலைக்கு வெறும் வெளித் தோற்றக் கருவியாக மட்டுமே இருப்பாயாக, இயங்குவாயாக!' என்றார். கிருஷ்ணன் சூச்சம உலகில், அதாவது - அணு இயக்கத்தின் கடவுட் தன்மையில், அருச்சுனனுக்கு முன்பேயே முடிந்துவிட்ட வேலையைக் கண்களுக்குத் தெரியும் இந்த வெளியுலகத் தோற்றத்தில்; அதை நிறைவேற்றி வைத்திட அருச்சுனன் ஒரு கருவியாகவே இருந்தான்் - அவ்வளவுதான்்.

எனவே, சூக்கும உலகில் நிறைவேற்றப் பட்டவைகளே, காலச் சுழற்சியால் வெளியுலகத் தோற்றத்தில் வெளிப் படுகின்றன.