பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i i8 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

உடனே அரவிந்தர் சிரித்தபடியே ஆசானைப் பார்த்து, 'இருப்பதை அனுப்புங்கள் என்று பணத்தைக் கொடுத்தார். மறுபடியும் தீனேஷ்குமார் சங்கடத்தோடு மறுத்தபோது, என்னைவிட உங்களுக்குத்தான்் தேவை அதிகம். நீங்கள் குடும்பத்துக்கு அனுப்பப் பணம் கேட்கிறீர்கள். நான் என் தாயாருக்குப் பிறகு கூட அனுப்புவேன்' என்றார் அரவிந்தர்.

பதிலேதும் கூற முடியாத தீனேந்திர குமார், தனது வீட்டுக்குப் பணத்தை அனுப்பி வைத்தார். இந்த ஆசிரியர் - அரவிந்தருடன் இருந்தே நெருக்கமாகப் பழகியவர்: எப்படிப் பட்டவர் அரவிந்தர் என்பதை அவர் முழுமையாக உணர்ந்தவர்.

தினேந்திரகுமார் எழுதிய தனது நூலில், அரவிந்தர் மனிதப் பிறவியே அல்லர், சாபத்தால் பூலோகம் வந்துள்ள ஒரு தெய்வப் பிறவியாகவே எனக்குத் தோன்றினார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அரவிந்தர் யாருக்கும் கடிதம் எழுதம் பழக்கம் உடையவரல்லர் அப்படி யாருக்காவது எழுதினால், பத்து இருபது வரிகளிலேயே எழுதுவார். இத்தகைய ஒரு கடும் உழைப் பாளியாக அறிவைத் தேடிக் கொண்டே வாழ்ந்தார்.