பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i20 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

இலண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் அரவிந்தர் படித்துக் கொண்டிருந்தார். அங்கே கேம்பிரிட்ஜ் மன்றம் என்ற பெயரில் மாணவர்கள் கூடிக் கலந்து விவாதம் நடத்தும் மன்றம் ஒன்றிருந்தது. அதில் அவர் உறுப்பினராகச் சேர்ந்தார்.

அந்த மன்றத்தில் அரசியல் விவாதங்கள் கனல் பறக்க நடக்கும். அந்தக் காரசாரமான விவாத அரங்கில் அரவிந்தர் இந்திய அரசியலின் அடிமைத்தனங்களைப் பற்றியும், பிரிட்டிஷ் ஆட்சி நடத்தும் கொடுமைகளைக் குறித்தும் தீவிரமாகப் பேசுவார்.

இந்த உணர்ச்சிகள் அரவிந்தருக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்ததால்தான்், அவர் ஐ.சி.எஸ். தேர்வில் கலந்து வெற்றி பெற்று பிரிட்டிஷார் ஆட்சிக்கு அடிமையாக பணியாற்ற விரும்பவில்லை போலும்!

இந்தியா திரும்பிய அரவிந்தர், பரோடாவில் இருந்து கொண்டே, மும்பை நகரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'இந்து பிரகாஷ் என்ற பத்திரிக்கையில் இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு பல கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந்தார்.

இவ்வாறு அவர் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளில், இந்திய தேசிய பேரியக்கத்திலிருந்த மிதவாதிகளைக் கடுமை யாகத் தாக்கி எழுதி வந்ததுமல்லாமல், அவர்கள் வெள்ளைக் காரர்களிடம் இரந்துண்ணும் கோழைகள் என்றும் எழுதினார்.

'இந்து பிரகாஷ் பத்திரிகையில் அரவிந்தர் எழுதியக் கட்டுரைகளைப் படித்து வந்த புனே நகர் நீதிபதியான மகாதேவ கோவிந்த ராண்டே என்பவர், அவரை நேரில் சந்தித்து, இந்தியத் தலைவர்களை இவ்வளவு கடுமையாகத் தாக்கி எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இந்தியச் சிறைகளில் சீர்த்திருத்தம் தேவை என்பதைப் பற்றி எழுதி, ஏதாவது கிளர்ச்சி செய்தால் நல்லது என்றும் ராண்டே