பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#24 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

முகத்தில் குழந்தை தோற்றமுடைய சாதுத் தன்மை பொலிந் திருந்தது. அவள் எட்டாம் வகுப்பு படிக்கும் கல்லூரி மாணவி.

பெண்ணின் தந்தை பூபால சந்திர வசு என்பவர், அசாம் மாநிலத்தின் விவசாயத் துறை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். அப்போது அவர் கல்லூரி விடுமுறைக்காக கொல்கத்தா நகரில் தங்கியிருந்தார்.

அரவிந்தரின் நண்பருக்கு, பெண்ணின் தந்தையான பூபேந்திரரும் நண்பர். அதனால், திருமண பேச்சு முடிந்தது. 1901-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அரவிந்தருக்கும் மிருணாளினிக்கும் திருமணம் செய்தார்கள்.

எத்தனையோ பணக்காரர்களது பெண்களைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ள உறவினர்கள் அரவிந்தரை வற்புறுத்தியும், மறுத்து வந்த அரவிந்தர், ஏதோ டைப் அடிக்க நண்பர் வீட்டுக்கு வந்தபோது, அவரே பார்த்துவிட்ட அந்தப் பெண்ணை மணந்து கொண்ட சம்பவம், அவரது நண்பருக்கு வியப்பாக விளங்கியது.

இந்தத் திருமணம் நடந்தபோது, இந்திய விஞ்ஞானியான ஜகதீச சந்திரபோகம், மற்ற நண்பர்கள் பலரும் வருகை தந்து அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

திருமணத்தை முடித்துக் கொண்ட அரவிந்தர், நேராக பரோடா மன்னரைப் வந்து பார்த்தார். தம்பதிகளை மன்னர் வாழ்த்தினார். அவர்கள் வசதியாக குடியிருக்கக் கூடிய ஏற்பாடுகளைச் செய்து தந்தார். வசதிகள் வந்த பிறகும் அரவிந்தர் தனது படிக்கும் வழங்கங்களையோ, படிப்பையோ, சிந்தனை களையோ கடுகளவும் மாற்றிக் கொள்ளாமலேயே மனைவியுடன் வாழ்ந்தார்.

மிருனாளினி மன்னர் அரண்மனை செல்வாள்; தனது பெற்றோர்கள் இருப்பிடம் போவாள்; கணவருடனும் வாழ்வாள்; அரவிந்தர் அந்தளவுக்குத் தனது மனைவிக்கு முழு சுதந்திரத்தைக்