பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 125

கொடுத்து மதித்தார். இருவர் வாழ்க்கையும் இன்பவியலாகவே இருந்தது.

மனைவி கொல்கத்தாவிலுள்ள தந்தை வீட்டுக்குச் சென்றால், அங்கிருக்கும் மிருனாளினிக்கு அரவிந்தர் கடிதங்கள் எழுதும் பழக்கமில்லாதவரானாலும், சில வேளை களில் கடிதங்களை எழுதுவார். அந்தக் கடிதங்கள் புத்தகமாக வும் வெளிவந்துள்ளது.

அரவிந்தர் தனது மனைவிக்கு எழுதிய கடிதங்களை ஒவ்வொரு இந்து பெண்மணியும் படித்து அறிவுரை பெறும் கடிதங்களாகவே இருந்தன என்பதால், அவை புத்தகமாக வெளிவந்தது.

அந்தக் கடிதத்தில் வேறு என்ன சிறப்புகள் அமைந் திருந்தன என்றால், பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஆன்மீகச் சிந்தனை இருக்க வேண்டும்; என்பதற்கான விவரங்களை அதில் அவர் விளக்கியுள்ளார்.

பரோடாவிலே இருந்த அரவிந்தர் கொல்கத்தா வந்து இருவரும் சேர்ந்து இன்ப வாழ்வு வாழ்ந்தார்கள். என்றாலும், அரவிந்தரின் ஆன்மீக வாழ்வும், அறிவு பூர்வமான வாழ்க்கை யும் மிருனாளினிக்கு அவ்வளவாக ஒத்து வரவில்லை.

இதற்கிடையில், அரவிந்தரது அரசியல் உணர்ச்சிகளும் மிருனாளினிக்குப் பிடிக்கவில்லை. இறுதியாக அதையெல்லாம் மறந்துவிட்டு அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்தாரல்லவா? அதுவும் மிருனாளினிக்கு மனநிறைவை தரவில்லை.

பாண்டிச்சேரியில் இருந்த சகோதரி நிவேதிதா தேவியோடு மிருனாளினி தொடர்பு கொண்டு, அரவிந்தர் நிலையை விசாரித்துணர்வாள். சிறிது காலத்துக்குப் பிறகு அந்த அம்மையார் கொல்கொத்தாவிலுள்ள தனது தந்தையார் இல்லத்திலேயே

காலமானாள்.