பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


설3

துப்பாக்கிச் சுடும் குறிப் பயிற்சி அரவிந்தர் பெற்ற யோக சித்தி!

'தாய்நாடு, தாய்நாடு என்று தடந்தோள் தட்டித் தேசீய வாதிகள் மேடையிலே கூறுகிறார்கள். அந்தத் தாய்நாடு என்பது எது?

'சடப்பொருளா? அதாவது மலைகள், காடுகள், ஆறுகள், வயல்வெளிகளா - தாய்நாடு? அல்ல; அல்ல!

'எனது தாய்நாடு எது என்றால், எனது நாட்டைப் பெற்றத் தாயாக அறிகின்றேன்-பக்தி செய்கின்றேன்; வழிபடுகிறேன்.

'எனது தாயின் மார்புமீது ஒர் அரக்கன் ஏறி அமர்ந்து இரத்தம் குடிக்க முயன்றால் மகன் என்ன செய்கிறான்?

'கவலையற்று உணவுண்ண உட்காருகிறான்; மனைவி

மக்களுடன் சுக போகியாகி குலாவுகிறான்; அல்லது தாயைக் காக்க விரைகின்றான்

அரவிந்தர் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் மேற்கண்டவாறு கூறினார். அவர், தனது தாய்நாட்டை மாதாவாக