பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*23 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

இந்தக் கருத்து ஒன்றும் புதியதல்ல; இன்று தோன்றிய தல்ல; இந்தக் கருத்தை ஏந்தியவாறே நான் பிறந்தேன். இக் கருத்து எனது நாடி நரம்புகளில் நிறைந்துள்ளது. இந்த மகா விரதத்தை நிறைவேற்றவே பகவான் என்னை இம் மண்ணுலகுக்கு அனுப்பியுள்ளார்" என்று அரவிந்தர் தனது மனைவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். "இந்தக் கருத்து எந்த ஒரு சாதாரண மனிதனுக்கும் எழக்கூடிய நம்பிக்கைக் கருத்தா? எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதே போல அரவிந்தர், தனக்குப் பிடித்துள்ள பித்தம், அதாவது பைத்தியம் என்ன என்றும் தனது மனைவிக்கு விளக்கியுள்ளார். என்ன அது?

'கடவுளைத் தன் கண்களால் காண வேண்டும் என்பதே அந்தப் பித்தம் என்கிறார். உண்மைதான்ே? சொத்து சுகம் தேடுவோரை உலகம் போற்றுகிறது; புகழ்கிறது; திறமை யானவர்கள் என்று பாராட்டுகின்றது.

ஆனால், கடவுளைத் தேடுவோரை மட்டும் பைத்தியம் என்று வசை பாடுகின்றது அல்லவா? கடவுளைத் தேடு கின்றேன் என்று கூறிக்கொண்டு காமா சூரக் களம் காணும் பிரேமா நந்தரா என்ன அரவிந்தர்? அவர் தேசத்தையே தெய்வத் தாயாகக் கருதி வழிபாடு செய்திட்ட மாபெரும் தியாக மூர்த்தியாயிற்றே! அவரைப் போய் போலிச் சாமியார்களோடு ஒப்பிடுவது தவறல்லவா?

அரவிந்தர் மேலும் தன் மனைவிக்கு என்ன எழுதுகிறார் படியுங்கள்.

“எப்படியாவது பகவானை நேராகத் தரிசனம் செய்துவிட வேண்டும் என்பதே எனது பைத்தியமாகும். வார்த்தைக்கு வார்த்தை கடவுளின் பெயரைச் சொல்வதும், ஊரறியப் பிரார்த்தனைச் செய்வதும், நான் தெய்வ நம்பிக்கை மிகுந்தவன்" என்று பிறரிடம் காட்டிக் கொள்வதுமே இன்றைய மதமாகி விட்டது. நான் அதை விரும்பவில்லை.