பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மாணவர் விழிப்புணர்வு பெற அரசு கல்வி முறை பயன் தரா!

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கிழக்கு இந்தியக் கம்பெனி வியாபாரிகளான இங்லிஷ் வெள்ளையர்கள், மொகலாயர் பேரரசரான ஒளரங்கசீப் இடமும், மராட்டிய மாமன்னனான மாவீரன் சிவாஜி யிடமும், மதுரை தஞ்சைப் பகுதிகளை ஆட்சி செய்து கொண்டிருந்த நாயக்கர் மன்னர்களிடமும், சென்னையில் கர்நாடக நவாபு வாரிசுகளிடமும், குறிப்பாக சென்னப்ப நாயக்கரிடமும் ஆட்டுத் தோலளவுக்கு இடம் கேட்டு வாணிகம் செய்ய வந்தவர்கள் என்று ஒவ்வொரு மாநில அக் கால அரசு வரலாறுகள் அறிவிக்கின்றன.

இவ்வாறு வந்த கம்பெனி வியாபாரிகள் அங்கங்கே உள்ள அரசுகளைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளால், இரண்டு பூனைகளுக்கு அப்பம் பங்கிட்டுக் கொடுத்த குரங்கு நியாயம் நடத்திக் கொண்டு, சிறிது சிறிதாகப் பராத பூமியைக் கவர்ந்து விழுங்கி ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

அந்த வெள்ளைக்காரர்கள், இந்தியாவிலே இறக்குமதி செய்த அவர்களது நாகரிகத்தின்மீது இந்திய மக்கள் மோகம் கொண்டு, தங்களது சொந்த பாரம்பரியமான நாகரிகத்தை,