பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$34 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

பண்பாட்டை, பாவனைகளை இழந்தவர்கள் - கடற்கரையோர மக்களான வங்காளிகளும், தமிழர்களுமாவார்கள்.

பாரத நாட்டின் பண்டைய பண்பாடுகளையும், ஆன்மீகச் சிந்தனைகளையும், தெய்வ நெறிகளையும் மறந்து, கண்டதே காட்சி கொண்டதே கோலமெனும் லோகாயுத சடவாதத்தில் அமிழ்ந்து போனார்கள்.

ஆனால், அடிமை வாழ்க்கையின் அவலங்களை அறிந்து, அனுபவித்து, உணர்ந்து சுதந்திரமே எனது பிறப்புரிமை, அதைப் பெற்றே தீருவேன் என்ற மறுமலர்ச்சியையும், எழுச்சியையும் உணர்ச்சிகளாக மாற்றி, அதற்குப் புரட்சி வடிவம் கொடுத்தவர்கள் வங்காளிகளும் - தமிழர்களும்தான்்!.

வெள்ளையரை எதிர்த்து சிப்பாய் கலம் முதன்முதலில் தோன்றுவதற்கு முன்பே, வேலூர் புரட்சி தோன்றியதும், வெள்ளை வியாபாரிகளை எதிர்த்து இந்தியாவில் கப்பலோட்டி வ.உ.சிதம்பரம் பிள்ளை புரட்சி செய்ததும், வீரபாண்டியக் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் போன்ற வீரப் பெருமக்கள் வெள்ளை ஆட்சியை எதிர்த்ததால் தங்களது தலைகளை பறிகொடுத்த வரலாறுகளும் தமிழகத்திலேதான்்!

அதுபோலவே, தலைகொடுத்தார்களது சுதந்திர புரட்சிகள் வங்காளத்திலே இல்லையென்றாலும், வங்காள மண்ணில் பன் மொழிப் புலவர்களும், நோபல் பரிசுக் கவிஞர்களும், பரோபகாரி களும், நாவலர்களும், புரட்சி அரசியல்வாதிகளும், இந்தியத் தேசீயப் போராட்டத்தின் அற்புதத் தலைவர்களும், ஆன்மீக வேந்தர்களும், ஒருவர்பின் ஒருவராகத் தோன்றி மக்களிடையே மறுமலர்ச்சி யையும், எழுச்சியையும் தோற்றுவித்துக் கொண்டே இருந்தார்கள்.

சீர்த்திருத்த தேசியச் சிங்கமான இராஜாராம் மோகன்ராய், மகரிஷி தேவேந்திரநாத் தாகூர், இரவீந்திரநாத் தாகூர், பிரமானந்த கேசவேந்திரர், அரவிந்தரின் தாயைப் பெற்ற ரிஷி ராஜ நாராயணர் முதலியோர் மக்களுக்கு விழிப்பை உண்டாக்கினார்கள்.