பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

வெடிகுண்டு கலாச்சார விடுதலை இயக்கங்களும், புரட்சி உள்ளம் பூண்ட வாலிபர் களும் ஆங்காங்கே தோன்றி, கிரேட் பிரிட்டனுடைய அராஜக ஆட்சியின் ஆணி வேர்களை அறுத்தெறிய ஆரம்பித்தார்கள்.

அந்த புரட்சிவாதிகளின் பழிவாங்கல் தொல்லைகள் ஒரு புறம், இந்திய தேசிய இயக்கத்தின் சுதந்திரப் பணிகளின் போராட்டம் மறுபுறமென்று மக்கள் விழித்தெழ ஆரம்பித்து விட்டதைக் கண்ட அப்போதைய பிரிட்டிஷ் கவர்னரான கர்சான் பிரபு, வங்காளத்தை இரண்டாக உடைத்தார்:

வங்கத்தை உடைத்தால், சுதந்திரத் தீ அணைந்து விடும்! அதற்காக உழைப்பவர்களது பலம் குன்றும்; குறையும் என்று எண்ணினான் கர்சான் பிரபு

என்ன நினைத்தான்ோ அந்த அரசியல் வஞ்சகன். அதற்கு நேர் விரோதமாக, எதிராக சுதந்திரத் தீ காட்டுத் தீயாக மாறிவிட்டது. அதனால், நாட்டில் பெரும் கலகங்களும், குழப்பங்களும் அதிகரித்தன.

வங்கம், பீகார், ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை சித்திரை மாதத்துக் கத்திரிக் கோடையை விடக் கடுமையாக எதிர்த்தார்கள்.

இந்திய மக்கள் சுதேசி இயக்கம், பகிஷ்கார இயக்கம் என்ற இயக்கங்களைத் துவக்கிப் போராடிச் சிறை சென்றார்கள். இந்த இயக்கத்திற்குப் போராட்டப் பாடலாக இயற்றப்பட்டதுதான்் 'வந்தே மாதரம் பாடலும், முழக்கங்களுமாகும். இப் பாடலை எழுதியவர் பங்கிம் சந்திரர் சாட்டர்ஜி ஆவார்.

தமிழ்நாட்டுத் தேசியக் கவிஞாரன சுப்பிரமணிய பாரதியார், இந்தப் பாடலைத் தமிழில் 'வந்தே மாதரம் என்போம், நமது மாநிலத் தாயை வணங்குது என்போம் என்று மொழி பெயர்த்தார். பிறகு இந்திய தேசிய இயக்கத்தின் போராட்டப் பாடலாகவே இப்

பாடல் மக்களால் பாடப்பட்டது.