பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


蟹笼 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

காக வைக்கப்படுவதில்லை. புற வாழ்க்கை, அக வாழ்க்கை எல்லாமே ஒழுங்கற்ற முறையில் எப்படியோ இயங்கி

நமது எண்ணங்கள், செயல்கள், உணர்ச்சிகள் எல்லாமே இன்றும் இப்படியேதான்் இருக்கின்றன.'

நமது தலையானது ஒரு சந்தைக் கடை என்றால், நமது மனமே அசல் பைத்தியக்காரர்கள் மருத்துவமனையாகத்தான்் காட்சி தருகின்றது, வாழ்க்கையில் எதிலுமே நமக்கு ஒழுங்கு முறை கிடையாது."

இப்படிப்பட்ட நேரத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த போது, இலட்சுமியின் மறு அவதாரமாகவும், சரஸ்வதியின் மறு அவதாரமாகவும், நமது தெய்வீக அன்னை வந்தார்.'

'இறைவனுக்கு நிவேதனமாக, கடவுளுக்குச் செய்யப்படும் நைவேத்தியமாக வாழவேண்டிய நமது வாழ்க்கையும், ஒழுங்கும். எளிமையும், அழகுமுடையதாய் அமைக்க வேண்டியதின் அவசியத்தையும் விளக்கி, நடை முறையிலும் அவர் செய்து காட்டினார். அவ்வாறு அவரால் உருவாக்கப் பட்டதே புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் ஆகும்.'

ஆசிரமம் அன்னையின் படைப்பு என்றார் மகான் அரவிந்தர். ஒளியும் எழிலும், எளிமையும், ஒழுங்கும் எப்போதும் குடி கொண்டிருக்கும்.

1973-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி அன்று அன்னை தமது உடலை நீத்தார் : என்றாலும், அவர் இன்றும் ஆசிரமத்தில் வாழ்ந்து கொண்டும் செயல்பட்டும் வருகிறார்; ஆசிரமத்தை இயக்கியும் வருகிறார், என்றே ஆசிரம சாதகர்கள் இன்றும் நம்புகிறார்கள், பலர் உணர்கிறார்கள், சிலர் ஆன்ம அனுபவம் வாயிலாக அறிகிறார்கள்.

இத்தகைய ஆசிரம ஞான வாழ்க்கையை மக்களுக்கு உருவாக்கிக் கொடுத்த தெய்வத் தாயான நமது அன்னை அவர்களின் அற்புத உபதேச மொழிகளையும், அவரது ஞான வரலாறுகளையும் அடுத்து வரும் அத்தியாங்களில் அறிந்து பயன் பெறுவோமாக!