பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வந்தே மாதரம்’ பத்திரிக்கை நடத்தி முதன் முதல் சுதந்திரம் கேட்டவர்!

தேசியக் கல்லூரியின் முதல்வர் பணியைத் துக்கியெறிந்து விட்டு வெளியே வந்த அரவிந்தர், 'வந்தே மாதரம் என்ற பத்திரிக்கையைத் துவக் கினார். அந்த நேரத்தில் வங்காள மாநிலத்தில் தேசிய கொள்கை ளைத் துணிந்து எடுத்துக் கூறும் பத்திரிக்கைகள் எதுவுமில்லை.

இராஜா சுபோத் சந்திர மல்லிக் என்பவர் கொடுத்த நன் கொடைப் பணத்தை ஏற்று, விபின் சந்திர பாலர் வந்தே மாதரம் என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பு அரவிந்தரிடம் வந்ததால், அவர் அதை ஏற்று ஆசிரியராக இருந்தார்.

'வந்தே மாதரம் என்ற ஏடு நுழையாத வீடே வங்கத்தில் இல்லையெனலாம். அந்த அளவுக்கு அது மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது. அந்த இதழில் வெளியான காரசாரமான கட்டுரைகள், விமரிசனங்கள், இலக்கிய விளக்கங்கள், பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்ப்பு உணர்ச்சிகள் ஆகியன மக்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கி, பத்திரிக்கை விற்பனையும் பெருகியதால், வந்தே மாதரம் புகாத