பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி j41

வீடுகளே இல்லையென்று கூறும் நிலை ஏற்பட்டது. அதனால், நாட்டின் சுதந்திர லட்சியங்கள் மக்களிடையே பரவி அவர்கள் மனத்தில் இடம் பெற்றுவிட்டன.

அரவிந்தர், 'வந்தே மாதரம் பத்திரிக்கையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றதும், அரசியலில் அவர் தீவிரவாதம் காட்டினார்.

'வந்தே மாதரம் பத்திரிக்கையிலே முதன் முதலாக, பாரத நாட்டுக்கு முழுமையான சுதந்திரம், பூரண விடுதலை தேவை என்ற கோரிக்கை ஒலியை எழுப்பியவர் யார் தெரியுமா? அரவிந்த கோஷ்தான்். எத்தனை பேர் இதனை அறிவார்கள்?

முழு சுதந்திரம் தேவை என்ற கொள்கை முழக்கத்தை அரவிந்தர் மக்களிடையே எடுத்துக்கூறிய பின்புதான்், லோகமான்ய பாலகங்காதரத் திலகர், அரவிந்தர் கருத்தைப் பின்பற்றி, சுதந்திரம் எமது பிறப்புரிமை, அதைப் பெற்றே தீருவோம்' என்று முழக்க இடியை எழுப்பினார்.

திலகர் சுதந்திரக் கருத்தைத் தீவிரமாக வெளியிட்டதைக் கண்ட பஞ்சாப் சிங்கம் லாலா லஜபத்ராய்; அவரை பாராட்டி அதே தேசிய விடுதலை முழக்கத்தை அவரும் எழுப்பினார்.

விபின் சந்திர பாலர், அரவிந்தரின் பூரண சுதந்திரக் கொள்கையை ஏற்றுக்கொண்டார். அரவிந்தரின் இந்த தேசிய லட்சியத் தத்துவத்தை, பால், லால், திலக் என்ற மும்மூர்த்திகளும் ஆதரித்தார்கள். அவர்கள் பேசும் இடங்களில் எல்லாம் அரவிந்தர் கிளப்பிய சுதந்திரக் கொள்கையையே பேசி வந்தார்கள். பத்திரிக்கைகளிலே அதையே விளக்கி எழுதினார்கள்.

அரவிந்தர் திலகரைப் போன்றதோர் கோடையிடி பேச்சாளரல்லர். என்றாலும், அவர் மெதுவாக எதையும் பேசுவார். பேசும் கருத்துக்களும் சொல்லாழம் மிக்கவை, கூர்மையானவை; கட்டி வா என்றால் வெட்டி வரும் உணர்ச்சியை ஊட்ட வல்லவையாக இருக்கின்றன என்பதற்காக, அவரைப் பல சங்கங்கள் பேச அழைத்தன!