பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$42 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அழகான அவரது பேச்சுக்கள், தீப்பொறி பறக்கும் எழுத்துக்கள் தீவிர வாதம் கனல் கக்கும் சிந்தனைத் திட்டங்கள், ஆன்மீகச் சிந்தனைகளை எழுப்பும் வேத, இலக்கிய, இதிகாச எடுத்துக்காட்டுகள் ஆகியவற்றைப் படிக்கும் மக்கள், கேட்கும் கூட்டத்தினர் அவர்மீது தனியொரு மரியாதையைக் காட்ட ஆரம்பித்தார்கள். அதனால், அவரது புகழ் மற்ற தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளி வந்தது மக்கள் செல்வாக்கும் அதிகமாகப் பெருகியபடிய இருந்தது.

'வந்தே மாதரம் பத்திரிக்கையில் தேசிய தீவரவாதம் நெருப்புக் குவியலாகப் பொறிப் பறந்து கொண்டே, ஏறக்குறைய இரண்டே கால் ஆண்டுகளாக, அதாவது 26,27 மாதங்களாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருந்தன.

அரவிந்தர் எழுதிய ஒரு கட்டுரையை காரசாரத் தாக்குதல்களைக் கண்ட பிரிட்டிஷ் அரசு அவர்மீது, ராஜத் துரோகம் குற்றம் சாட்டி வழக்குத் தொடர்ந்து நடத்தியது. ஆனால், இதில் என்ன சிறப்பு என்றால், பத்திரிக்கை ஆசிரியர் அரவிந்தர்தான்் என்பதை ஆட்சி வர்க்கத்தினரால் நிரூபிக்க முடியவில்லை. ஏன் தெரியுமா?

இன்றைக்கு ஒரு துண்டு நோட்டீஸ் அச்சடித்தாலும் அச்சகம் பெயரை வெளியிடுகிறோம். பத்திரிக்கை என்றால் அதன் ஆசிரியர் பெயர், அவர் முகவரி, பத்திரிக்கை வெளியிடு பவர் பெயர், அவரது முகவரி, யார் அந்த ஏட்டை அச்சடித்தாரோ அவரது பெயர், முகவரி அனைத்தையும் வெளியிடுகிறோம். வெளியிட வேண்டும் என்பது பத்திரிக்கைச் சட்டமாகும்.

இந்தச் சட்டம் அரவிந்தர் காலத்திலே கிடையாது. அதனால், இதழில் ஆசிரியருடைய பெயரை அச்சிடும் பழக்கமில்லை. எனவே, 'வந்தே மாதரம் பத்திரிக்கை ஆசிரியர் அரவிந்தர்தான்் என்பதை ஆட்சி தொடுத்த வழக்கில் நிரூப்பிக்க முடியவில்லை.