பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 147

அந்தப் பத்திரிக்கை, பிரிட்டிஷ் ஆட்சியைப் பகிரங்கமாக எதிர்த்து, மக்களைப் புரட்சிக்குத் தயார்படுத்திக் கொண்டும் தூண்டி விட்டுக் கொண்டும் இருந்தது.

இந்தப் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்தவர்கள் யார் தெரியுமா? அரவிந்த கோவின் கடைசி தம்பியான பாரீந்திர குமார் கோஷஇம், தேவவிரத் என்பவர்களுமாவர்.

இந்த இருவர்களில் பின்னவர் யுகாந்தா பத்திரிகைக்கு முதல் ஆசிரியராகவும், முன்னவர் இரண்டாவது ஆசிரியராகவும் இருந்தார்கள். அதனால், அந்த யுகாந்தா இதழ் ஒரு தீவிரவாதிகளின் ஒளிவிளக்காக அமைந்தது.

'யுகாந்தா தீவிரவாத ஏடு என்றாலும், அதன் தலையங்கப் பகுதியின் மேற்புறத்தில் பகவத் கீதையின் சுலோகம் அச்சிடப்பட்டிருக்கும். ஏனென்றால், இந்து அற நூல்களிலும், உணர்ச்சியை ஊக்குவிக்கும் அறிவுரைகள் உள்ளன என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக அந்தக் கீதை சுலோகத்தை அச்சிட்டிருப்பார்கள்.

'யுகாந்தா பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் காளிமாதா தனது கையில் வாளேந்திக் காட்சி தரும் படம் போடப் பட்டிருக்கும். அந்த ஏடு, தீவிரவாதிகளிடம் மட்டும் பரவாமல், உணர்ச்சிவசப்பட்ட பொது மக்கள் கைகளிலும் இருக்கும். பொதுவாகத் தீவிரவாதிகளின் கொள்கை ஏடு அது என்றால் தகும்.

பொது மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் இதழ் யுகாந்தா என்பதால், அது நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்குப் பெற்று 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனையாகிக் கொண்டிருந்தது.

இருபதாயிரம் பிரதிகள் மக்களிடையே விற்பனையா கின்றது என்றால், அந்த அளவுக்கு அது செல்வாக்கும், சொல்வாக்கும் உடையதாகத்தான்ே இருக்கும்?.

புரட்சிவாதிகளான வாலிபர்கள் கல்லூரி பட்டம் பெற்ற கல்வியாளர்களாக இருந்தார்கள். அதுவும் சாதாரண பட்டம் பெற்றவர்களல்லர். மருத்துவ டாக்டர், இலக்கிய டாக்டர்,