பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதங்கள் ஆற்றிய பல்கலை வித்தகர் அன்னையார் பிறந்தார்

உலக வரலாற்றில் பதினெட்டாம் நூற்றாண்டும், 19-ஆம் நூற்றாண்டும் மறக்க முடியாத நூற்றாண்டுகள் ஆகும்.

அந்த நூற்றாண்டுகளில், பல்வேறு நாடுகளில், பல்வேறு துறைகளில், பெருமை மிக்கப் பேரறிஞர்கள். ஆன்மீகப் பெரியார்கள், புகழ் பெற்ற போர் வீரர்கள், மனித வாழ்க்கையை மேம்படுத்தும் தத்துவங்கள் பலவாறு தோன்றி, உலகைப் புதுப் பாதைகளிலே, மறுமலர்ச்சிச் சிந்தனைகளிலே நடை போட வைத்த பெருமை மிக்க நூற்றாண்டுகள் ஆகும்!

உலக மக்கள் உயிர் வாழ்வு வாழ்வதற்கு அறிவு அவசியமா? என்ற கேள்வி உலகை உருட்டிக் கொண்டிருந்த போது, உள்ளது உள்ளபடி அவனியை அறியும் அறிவு ஒரு கருவி: அதற்கேற்றவாறு அது அரசனையும், மக்களையும் ஒழுக வைப்பது; அறிவு இல்லாவிட்டால் நல்லரசு அமையாது: மக்களாலும் மாண்புமிகு வாழ்வைப் பெற முடியாது: வாழ முடியாது என்று உலகப் பேரறிஞர்களும், அவர்களுக்கெல்லாம்