பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 149

இந்த குண்டு வீச்சு நடைபெற்றதால் பிரிட்டிஷ் அரசு பரபரத்தது. புரட்சி இயக்க வாலிபர்களைக் கைது செய்தது. குண்டு வீசிய வாலிபர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தார்கள்.

கொல்கத்தாவிலுள்ள மாணிக்தல்லாவில் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிலகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தொழிற்சாலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று, அரவிந்தகோஷ் தம்பியான பாரீந்திரகுமார் கோஷையும், மற்றும் சில வாலிபர்களையும் போலீசார் கைது செய்தார்கள்.

முசப்பர்பூர் வெடிகுண்டு வழக்கு, வெடிகுண்டு உற்பத்திச் சாலை சம்பந்தமான வழக்குகள் சார்பாக, முப்பத்தாறு பேர்களை அரசு கைது செய்து சிறை வைத்தது.

இப்படியெல்லாம் புரட்சிக்காரர்கள் இயங்க, அவர்களை இயக்குவது அரவிந்தர்தான்் என்று அரசு திட்டவட்டமாக நம்பியது. எனவே, பிரிட்டிஷ் அரசு, அரவிந்தர் இல்லத்தை திடீர் சோதனை செய்தது. சோதனையில் எந்தவிதமான அபாயகரமான பொருளும் கிடைக்கவில்லை.

மிருனாளினி தேவியின் பெட்டியில் இருந்த சில கடிதங்களைப் போலீசார் கைப்பற்றினார்கள். அந்தக் கடிதங்கள் எல்லாம் தனது மனைவிக்கு அரவிந்தர் எழுதிய கடிதங்கள்தான்் என்று தெரிந்து கொண்ட பிறகும், அக்கடிதங்களை ஒன்றுகூட விடாமல் எடுத்துக் கொண்டு சென்றார்கள். கடிதங்களை எடுத்துக் கொண்டதோடு நில்லாமல், அரவிந்தரையும் கைது செய்தார்கள் போலீஸ் அதிகாரிகள்.

மிருணாளினி பெட்டியில் ஒரு சிறு அட்டைப் பெட்டி இருந்தது. அதனுள் காவி மண், கொஞ்சம் இருந்ததை கிளார்க் என்ற போலீஸ் அதிகாரி பார்த்தார். பயங்கரமான ஒரு வெடி மருந்து பொருளாக அந்தக் காவி மண் இருக்கலாம் என்று எண்ணி அந்த மண்ணைச் சோதனை செய்தார். அவர் நினைத்தபடி இல்லாமல் அந்த மண் சாதாரண மண்தான்் என்பதை அந்த அதிகாரி அறிந்தார்.