பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 151

அதனால், எல்லாக் கைதிகளுக்கும் ஒரே சிறை, ஒரே வேலை, ஒரே கொடுரங்கள் நடத்தப்பட்டன்.

குற்றம் செய்தவர்கள் அனைவரும் ஒரே அறையில் இருந்தார்கள். ஒரு சில வாலிபர்கள் போலீசாரின் துன்புறுத்தல் களுக்கும், அடி உதைகளுக்கும் பயந்து வெடிகுண்டு உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையைப் பற்றிய உண்மை களைக் கூறிவிட்டார்கள்.

வேறு சிலர் அப்ரூவர்களாக மாறிவிட்டார்கள். அவ்வாறு மாறியவர்களின் தலைவனான நரேன் கோசாயி என்பவனை அடித்துக் கொன்று விட்டார்கள். அதனால் அரவிந்தரை ஒரு தனியறையிலே வைத்துப் பூட்டினார்கள்.

அரவிந்தரைப் பூட்டிய அறை ஒன்பது அடி நீளமும், ஐந்தடி அகலமும் கொண்ட ஒரு கூடு போல இருந்தது. காற்று உள்ளே வர முடியாது; சன்னல்கள் ஏதுமில்லாத ஒர் இருட்டறை அது. இரும்புக் கதவு போடப்பட்ட அறை, வெளியே கொஞ்சம் கல் தரை. உயரமான மதிற்கூவர்களான அறை. அந்த அறையில் ஒரு மரக்கதவு. அந்தக் கதவில் சிறு துவாரங்கள் இரண்டிருந்தன. அந்தத் துவாரங்கள் மூலமாக அறையுள்ளே கைதிகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம். காவலாளிகள் அடிக்கடி தன் மூலம் அறையில் நடப்பதைப் பார்ப்பார்கள்.

அந்த அறையில் வெய்யில் தகதகவென்று கொதிக்கும். மழைக் காலமானால் தண்ணிர் அந்த அறையுள்ளே புகுந்து விடும். அந்த அறை எப்படி இருந்தது என்பதை அரவிந்தரே கூறுகிறார் கேளுங்கள் :

'படுக்கை அறைக்குப் பக்கத்திலே கக்கூசை அமைப்பது சீமை நாகரிகத்தின் சிறப்பு; ஆனால், ஒரு சிறு இடத்தை படுக்கை அறை, சாப்பாட்டு அறை, கக்கூசாகப் பயன் படுத்துவதை மிகச்சிறப்பாக கூறவேண்டும். நாம்தாம் கெட்ட பழக்கங்களுள்ள இந்தியர்கள் ஆயிற்றே! நாகரிகத்தின் இவ்வளவு உயர்ந்த படியை எட்டுவது நமக்குச் சிரமம்தான்்.