பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

இந்தச் சிறைச்சாலையே நாளாகவாக அரவிந்தரின் தவச் சாலையாக ஆயிற்று முதலில் அவர் மனம் சோர்ந்தது. அச்சம் கொண்டது; அதைரியமுற்றது. பகவானே! என்னை காப்பாற்ற மாட்டாயா? என்று கடவுளிடம் அவர் முறையிட்டுக் கொண்டிருந்தார்.

சில நாட்கள் ஆனதும் அவருக்கு அதெல்லாம் சாதாரணமாகி விட்டதால் மன உறுதி செய்து கொண்டார். அவர் கூறுகிறார் கேளுங்கள் :

தியானத்தில் அமர்ந்தேன்; தியானம் செய்ய முடிய வில்லை. பயனற்ற முயற்சியால் மனம் சோர்ந்தது; செயலற்ற எனக்கே எரிச்சல் மூண்டது; நான்கு புறங்களிலும் திரும்பிப் பார்த்தேன். கடைசியில், தரையில் சில பெரிய கறுப்பு எறும்புகள் துவாரம் நோக்கி ஓடுவதைக் கண்டேன்.

கறுப்பு எறும்புகள் சிவப்பு எறும்புகளைக் கொட்டிக் கொட்டிக் கொலை செய்வதைக் கண்டேன். கொடுமை இழைக்கப்பட்ட சிவப்பு எறும்புகளிடம் எனக்கு இரக்கமும் அனுதாபமும் உண்டாயின. கறுப்பை வெருட்டிச் சிவப்பைக் காப்பாற்றினேன் என்று தம் உள்ள வேதனைகளை அரவிந்தர் எழுதுகிறார்.

இப்படிப்பட்ட துன்பக் காட்சிகளைப் பார்த்து, அவர் முயற்சி செய்து மாற்றி கொண்டார் தனது மனத்தை. அவர் எழுந்து உலாவும்போது, உபநிடத மந்திரங்களை மனனம் செய்யலானார்; எல்லாவற்றிலும் நாராயணன் நிறைந்துள்ளான் என்ற சத்தியத்தை அனுபவமாக்கிக் கொள்ள முனைந்தார்.

மரங்களிலும், சிறையிலும், மனிதர்களிலும், விலங்கு களிலும், பறவைகளிலும், விண்ணிலும், மண்ணிலும் எங்கெங்கும் பிரம்மம் நிரம்பியுள்ளதென்னும் மந்திரத்தைக் கூறிக்கொண்டே, எல்லாப் பொருள்களையும் அந்தப் பாவனை களோடு பார்த்தார்; சிந்திக்கலானார்.