பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #53

இவ்வாறு செய்யச் செய்ய அவருக்கு சிறைக்கூடம் சிறைக்கூடமாகவே தோன்றவில்லை. மதிலும், இரும்புக் கதவும், கதிரொளியால் ஒளிரும் மரங்களும், மற்ற பொருள் களும் உயிரற்ற சாதாரனப் பொருள்களாகத் தோன்றாமல், அவை அவரிடம் அன்பு கொண்டு, அவரை அரவணைத்துக் கொள்ள முயல்வதாக அவருக்குத் தோன்றத் தொடங்கின.

பிறகு ஒரு நாள், கடவுள் அவருக்குக் தரிசனம் அளித்ததாகக் கூறுகிறார். தரிசனத்தின் பலனை அவருடைய சொற்களால் அறியலாம். இதோ அரவிந்தரே பேசுகிறார் :

'மற்ற மனிதர்களிடமிருந்து என்னைப் பிரித்து வைத்துள்ள சிறையைப் பார்த்தேன். அதனுடைய மதிற் சுவர்களுக்கு இடையில் நான் மூடுண்டு கிடக்கவில்லை. ஆனால், வாசுதேவனால் சூழப்பட்டிருப்பதைக் கண்டேன்."

"எனது சிறைக்கு வெளியில் ஒரு மரம் இருந்தது. அதன் நிழலில் உலாவிக் கொண்டிருந்தேன்; ஆனால், இப்போது அங்கு மரமில்லை; அங்கு வாசுதேவன் நின்றதைக் கண்டேன். அங்கு கண்ணனே நின்று எனக்கு நிழல் விரிப்பதைக் கண்டேன்.

'நாராயணனே காவற்காரனாய்க் காவல் புரிந்து கொண்டிருந்தான்்; படுக்கைக்காக எனக்குத் தரப்பட்டிருந்த முரட்டுக் கம்பளத்தின்மீது சாய்ந்தேன்; என் தோழன், என் அன்பன் கண்ணன், என்னை அரவணைத்துக் கொண்டிருப்பதாய் உணர்ந்தேன்'.

சிறையில் மட்டுமா அரவிந்தர் வாசுதேவனைச் சந்தித்தார்? வழக்கு நாள்களில், அவர் கூண்டில் நிறுத்தி வைக்கப்படுவார்; சாட்சிகளின் விசாரணை நடந்து கொண்டிருக்கும்; அப்போது :

"பகவான் சொன்னார் ; நீ சிறைக்கு அனுப்பப் பட்டபோது, நீ மனம் சோர்ந்து, எங்கே, உன் பாதுகாப்பு, உன் பாதுகாப்பு எங்கே?' என்று நீ அலறி என்னை அழைக்க வில்லையா? சரி, மாஜிஸ்டிரேட்டைப் பார்; வக்கிலைப் பார்."