பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு;

அரவிந்தர் விடுதலையானார்!

ஆr

அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு வரலாற்று புகழ் பெற்றுவிட்ட வழக்கு மட்டுமன்று; இந்திய மக்கள் மனத்தை ஈர்க்கப்பட்ட ஒரு தேசபக்தரான அரவிந்தகோஷை வெடிகுண்டு வீச்சுக் குற்றத்தில் சதி செய்தார் என்னும், தீவிரவாதிகளுக்குரிய தலைவர் என்றும், 'வந்தே மாதரம் யுகாந்தா போன்ற பத்திரிக்கைகள் மூலமாக, வாலிபர்களைப் பிரிட்டிஷ் அரசுக்கு விரோதமாகத் தூண்டி விட்டார் என்னும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அரவிந்தரைக் கைது செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் வழக்கு அலிப்பூர் வெடிகுண்டு வழககாகும.

இந்த வழக்கு விசாரணையைப் பார்க்க, வழக்கு மன்றத்திலும், அதற்கு முன்பாகவும் ஆயிரக்கணக்கான தேச பக்தர்களும், பொதுமக்களும் பெருங் கூட்டமாகத் திரண்டு அலைமோதிக் கிடக்கின்றார்கள்.

ஆரவாரம் ஏதாவது வழக்கு மன்றத்திலோ, மக்கட் திரளிலோ உண்டா என்றால் இல்லை. ஆனால், ஆர்வம் அலை மோதும் அமைதியே அந்தக் கூட்டத்தில் எதிரொலித்தது.