பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

இந்த வழக்கில் 'முப்பத்தாறு இளைஞர்கள் பிரிட்டிஷ் மாமன்னரை எதிர்த்துப் போர் தொடங்கினார்கள்' என்பது குற்றச்சாட்டு.

குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்ட பொய்கள் என்றாலும், அந்த இளைஞர்கள் கதி என்னவாகுமோ என்ற கவலை கொண்ட மக்கள் அக்கூட்டத்திலே அதிகமாக இருந்தார்கள். இந்த வழக்குக்கு மொத்தம் இருநூற்றாறு சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டார்கள்.

நாலாயிரம் பொருட்கள், கோர்ப்புகளாகப்பட்டிருக் கின்றன. வெடிகுண்டுகள், கைத் துப்பாக்கிகள் போன்ற ஐநூறு பொருள்கள் எக்சிபிட்'; அதாவது, எல்லாரும் பார்ப்பதற்கான காட்சிப் பொருள்களாக நீதிமன்றத்தில் போலீசாரால் வைக்கப்பட்டிருந்தன.

வழக்கோ மிகச் சிக்கலானது; மிகப் பெரியது; சிக்கல்கள் நிறைந்தது; அரசுக்கு எதிரான ராஜ துரோக வழக்கு என்று பிரிட்டிஷ் ஆட்சியால், புரட்சி இயக்க வாலிபர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு.

இந்த வழக்கை எதிர்த்து வாதாட வந்திருப்பவர் எதிர்கால இந்திய தேசிய இயக்கத்தில் தேசபந்து என்ற பெரும் புகழை பெற்றவரும், தேசியத் தலைவர்களிலே அதிக சக்தி வாய்ந்த வரும், காந்தியடிகளை எதிர்த்தே காங்கிரசினை உடைத்து தேர்தலில் நின்று ஏழெட்டு மாநில ஆட்சிகளை அமைத்திட்ட சக்தி பெற்றவருமான சித்தரஞ்சன் தாஸ் என்ற வழக்கறிஞ இளைஞராவார்.

அரவிந்தரது வழக்குக்காக சித்தரஞ்சன்தாஸ் வாதாட வந்தபோது, அவர் மக்களிடையே அவ்வளவாக பிரபலமாகா தவராக இருந்தார்.

அவர் அரவிந்தர் அனுமதியைச் சிறையிலே சென்று பெற்று, அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் ஒரு பத்து பைசா காசு கூடப் பெறாமல் அரவிந்தருக்காக வாதாட வந்தார்.