பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 157

சித்தரஞ்சன், வெடிகுண்டு வழக்கின் ஆவணங்களை எல்லாம் ஒன்று விடாமல் ஆராய்ந்தார்! சிந்தனை செய்தாா

அரவிந்தரும் வழக்கு ஆரம்பத்தில் வழக்கறிஞருக்குக்கான எல்லா யோசனைகளையும் கூறினார். தெய்வமே கதி என்ற ஆன்மீக சிறைச் சரணாகதிக்குப் பிறகு அரவிந்தர், சித்தரஞ்சன தாசுக்கு உதவும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டார்! வழக்கைப் பற்றி அரவிந்தர் கவலைப்படவில்லை.

சித்தரஞ்சன் தாஸை எதிர்த்தும் - வெடிகுண்டு வழக்கை ஆதரித்தும், அரசு சார்பாக வாதாட வந்திருப்பவர் யார் தெரியுமா?

பிரிட்டிஷ் ஆட்சியினர் வழக்குகளுக்காக வாதாடி வெற்றி பெறும் வல்லமை பெற்ற வழக்கறிஞரான ஈ.நார்ட்டன் துரை ஆவார்.

குற்றவாளியெனக் கூறப்பட்ட அரவிந்தரின் சார்பாக வாதாட வந்த வழக்கறிஞர் சி.ஆர்.தாஸ், மிகவும் கம்பீரமான குரலில், உள்ளுருக்கும் சொற்களைப் பயன்படுத்திப் பேசிக் கொண்டிருந்தார். -

வழக்கு மன்றத்தில், வழக்கறிஞர் சித்தரஞ்சனரின் வாத வார்த்தைகளின் கூர்மை உணர்ச்சிகளை உன்னிப்பாக, பரபரப்புடன் நிதான்மாக நீதிபதி கேட்டுக் கொண்டிருந்தார். அவரை நோக்கி, குற்றவாளியின் வழக்கறிஞர் பேசுகிறார்.

'குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இந்த மனிதர் வழக்கு மன்றத்தின் முன்னிலையில் மட்டும் நிற்கவில்லை. வரலாற்றின் உயர்நீதி மன்றத்தின் முன்னிலையிலும் நிற்கிறார்.

இந்த விவாதச் சபையின் வாத ஒலிகள்; அமைதியில் அடங்கி மறைந்து போகும். இந்தக் குழப்பமும் - கிளர்ச்சியும் ஒய்ந்துவிடும். அவர் இறந்ததும் மறைந்தும் போவார். ஆனாலும், நீண்ட காலத்துக்குப் பிறகும்கூட, அவருடைய தேசபக்தியைப் பாடிய கவிஞராக அவர் போற்றப்படுவார். நாட்டுப் பக்தியின் தீர்க்கதரிசி யாகப் பாராட்டப்படுவார். மனித சாதியைப் போற்றியவர் என்று வணங்கப்படுவார்.