பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

பேராசானாக விளங்கும் திருவள்ளுவர் பெருமானும், அறிவுடையார் எல்லாம் உடையார் என்று கூறியுள்ளார்கள்.

மக்களை நல்லரசு நடத்த மன்னன் ஒருவன் தேவை, அவனுக்கென ஓர் ஆட்சி தேவை. இவை இரண்டும் இல்லாவிட்டால், உலகத்தில் அந்தந்த நாடுகளில் கலவரம், குழப்பம், கொலை, கொள்ளை, ஒழுங்கற்ற நடத்தைகள், அதிகமாகிவிடும். மக்களால் நல்வாழ்வு பெற முடியாது.

மக்கள் அமைதியாக உண்ண முடியாது. உறங்க முடியாது: சுற்றங்களைப் பேண முடியாது. எனவே, அரசு என்ற ஒன்று தேவை. அதற்கு உயிர் போன்ற மன்னன் ஒருவனும் தேவை என்று நமது தமிழ் நாட்டுச் சங்க காலப் பாடல் ஒன்று கூறுகிறது. அது இது :

'நெல்லும் உயிர் அன்றே: நீரும் உயிர் அன்றே: மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.” என்று கூறுகின்றது. எனவே, அரசு தேவை; அதற்கு அரணாக அரசன் ஒருவனும் அமைய வேண்டும். அந்த அரசன் மலர்தலை உலகுக்கு உயிர் போல சிறந்திருக்க வேண்டும் என்ற கருத்து திடமிாடியது.

அந்தக் காலத்தைத் தகர்க்க, ஐரோப்பா கண்டத்திலே பல நாடுகளில் அரசன் இல்லாமலே-ஆட்சியை நடத்த முடியும் என்ற தத்துவம், பதினெட்டாம் நூற்றாண்டில் தலை தூக்கும் புரட்சிகளாக உருவாகும் நிலைகள் நடமாடின.

பிரான்சு நாட்டின் தலை நகரமான பாரீஸ் நகர், நவ நாகரிகத்தின் தலைமை இடமாக விளங்கியது. அங்கேதான்் நாகரீகம் முதிர முதிர, புரட்சிக் கருத்துக்கள் மக்கள் மனங்களிலே மலர்களாகப் பூத்து மணம் கமழ்ந்தன.

மக்கள் மனங்களிலே மணந்த அந்தப் புதுமைச் சிந்தனைகளிலே ஒன்றுதான்் பிரெஞ்சுப் புரட்சி. இந்தப் புரட்சி 11.8.1789-ஆம் ஆண்டில் பிரெஞ்சு நாட்டில் தோன்றியது.