பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 459

எதிர்காலம் உங்களைக் குறை கூறும் வண்ணம் நடந்து கொள்ளாதீர்கள் என்று சித்தரஞ்சன்தாஸ் கேட்டுக் கொண்டார்.

அரவிந்தருக்கு விரோதமாக, பிரிட்டிஷ் அரசு போலீசாரால் வழக்கு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சியங்கள் ஒவ்வொன்றின் உள்நோக்கங்களை விரிவாக விளக்கிப் பேசினார். அப்போது சித்தரஞ்சன்தாஸ் குறிப்பிடுகையில் :

“அரவிந்தர் குற்றவாளியே என்று முன்னதாக நீங்கள் முடிவு கட்டிக் கொண்டு அவருடைய சாட்சியக் கடிதங்களைப் படித்தால், அந்தக் கடிதங்களில் அதற்கு ஆதரவாகச் சில வாக்கியங்களை நிச்சயமாகக காண்பீர்கள்.

அவ்வாறு முடிவுக் கட்டிக் கொள்ளாமல் கடிதங்களைப் படித்துப் பாருங்கள். நீங்கள் நினைத்துக் கொண்டதற்கு நேர் பொருளைக் காண்பீர்கள்.

அரவிந்தருக்கு விரோதமாக, அவருடைய தம்பி பாரீந்திர குமார் கோஷ் எழுதியதாக வழக்கு மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டக் கடிதம் ஒன்று, முக்கியமான சாட்சியமாக இருக்கின்றது.

இதுதான்் அந்தக் கடிதம் :

Dear Brother,

Now is the time, Please try and make them meeet for our conference, We must have sweets all over India ready made for imergencies. I wait here for your answer.

Yours affectionate, Barindra Kumar Ghose.

(மேற்கண்ட இங்லிஷ் கடிதத்தின் தமிழ் ஆக்கம் இது)

அன்புள்ள அண்ணா,

இதுவே தருணம்; அவர்கள் எல்லோரும் நமது மாநாட்டில் வந்து கொள்வதற்குத் தயவு செய்து முயற்சி செய்யுங்கள். அவசர