பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† SÖ ஆன்மீக ஞானிகள் : அன்னை-அரவிந்தர்! காலத்துக்காக இந்தியா முழுவதும் நாம் மிட்டாய்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். தங்கள் பதிலுக்காக இங்கு காத்திருக்கிறேன்.

தங்கள் அன்புள்ள,

பாரீந்திர குமார் கோஷ்

இந்தக் கடிதத்தை அரசாங்க வழக்கறிஞர் நார்டன் துரை விளக்கிப் பேசியபோது கடிதத்தில் வரும் மிட்டாய்கள் என்ற சொல்லை, வெடிகுண்டுகளைக் குறிப்பதாகும் என்று வேறு சில ஆதாரங்களோடு விளக்கினார்.

அதற்கு பதிலுரைத்தார் சித்தரஞ்சன்தாஸ். அது இது :

"இந்தக் கடிதம் ஒரு பொய்க் கடிதம் என்பதே எனது முடிவு. வங்காளத்திலுள்ள மக்கள், தங்கள் தமையன்களுக்கு எழுதும் கடிதத்தில், தம்பி என்பவர், தனது முழுப் பெயரையும் கையெழுத்திடும் வழக்கமில்லை. இங்லிஷ்காரர்கள் முறைப்படி 'டியர் பிரதர் என்று எழுதுவதும் எங்கள் சாதிப் பழக்கமில்லை.

“பாரீந்திர குமார் கோஷ், ஆங்கிலத்தில் உயர்ந்த புலமை uq60Lusit. g6, is Emergencies 67&ssp Glösöö6060 mergencies என்று தவறுதலாக ஒரு போதும் எழுத மாட்டார்.

'கடிதம் பொய் என்பதற்கு இந்த உட்பிரமாணங்களைத் தவிர, போலிஸ் சோதனை செய்தபோது, இந்தக் கடிதம் கிடைத்தது அல்ல என்பதையும், பிறகு, போலீஸ்காரர்களால் இடைச் செருகல் செய்யப் பட்டக் கடிதம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் என்றார் சித்தரஞ்சனதாஸ்.

இதற்கு ஆதாரமாக, பல வழக்குகளில் போலீஸ்காரர்கள் இவ்வாறு இடைச்செருகல் கடிதங்களைச் செருகியிருப் பதையும், அதற்கு நீதிபதிகள் செய்திருந்த கண்டனத்தையும் சித்தரஞ்சன் ஆதாரமாய் குறிப்பிட்டார்.