பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அவர் நீதியை நிலை நாட்டுவாரா? அல்லது, அரசாங்கத்தை திருப்தி செய்யும் வகையில் தீர்ப்புக் கூறுவாரா? என்று நீதிமன்றம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

குற்றவாளி எனக் கூறப்பட்ட அரவிந்தரோ எந்தவிதமான மன அதிர்ச்சியும் இல்லாமல், சிறையறையிலே அவர் எப்படி நம்பிக்கையோடு நாராயணனையும், கண்ணபிரானையும் நினைத்து, ஆன்மீக உணர்வோடு 'இறைவனிடம் கையேந் துங்கள், அவர் கைவிட மாட்டார்' என்று எண்ணிப் பிரார்த்தனையும் - தியானமும் செய்து கொண்டு நீதிமன்றக் கூண்டில் வந்து நின்றரோ, அதே சிந்தனையோடு எந்தவிதச் சலனமும் இல்லாமல் இப்போதும் நின்றுகொண்டே இருந்தார்.

சித்தரஞ்சன்தாஸ் இந்த வழக்குக்காக எந்தவித வழக்கறிஞர் தொகையும் பெறாமல், தேசபக்தி என்ற ஒன்றையே கட்டணமாகக் கருதி, அரவிந்தரின் வழக்கை மேற்கொண்டார்.

அரவிந்தருடைய தெய்வீகச் சிந்தனையும், ஆன்மீகப் பற்றையும், அவருக்கு பாரத தேசத்தின் மேலிருந்த தேச பக்தியையும் மனமார உணர்ந்து, தெளிந்த பின்பே, அரவிந்தர் உண்மையான ஒரு தேச பக்தர், ஆன்மீகவாதி. அவரைக் காப்பாற்ற வேண்டும்; தேசபக்தியின் உண்மை வெற்றி பெற வேண்டும்; அதை உலகம் உணர்ந்து போற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் மோதல்களாலேதான்், இந்த வழக்கில் அவர் தான்ாகவே முன் வந்து அரவிந்தர் ஒப்புதலைப் பெற்று; இந்த வழக்கிற்கு சி.ஆர். தாஸ் வந்து வாதாடினார்.

வழக்கின் விசாரணைகள் முடிந்தன. இரு தரப்பு வழக்கறிஞர்களும் அவரவர் கட்சியைத் தொகுத்துக் கூறுவது வழக்கம். அதுவும் மேலே கண்டவாறு முடிந்தது.

இறுதியாக, அந்த ஆங்கிலேய நீதிபதி பீச் கிராஃப்ட், 'அரவிந்தர் குற்றவாளி அல்லர்” என்று தீர்ப்புக் கூறினார்.