பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 167

நீ, இந்து சமய நெறியைப் பின்பற்றுகிறாயா? அல்லது, நவநாகரிக நெறியைப் பின்பற்றுகிறாயா? என்பதே இப்போது பிரச்சினை. ஒரு பைத்தியக்காரனை மணந்து கொண்டாய், முன் பிறவியில் நீ செய்த வினைகளின் பயன் அது. நம் விதியை நாமே நிர்ணயித்துக் கொள்வது நல்லது. எப்படி அதை நிர்ணயித்துக் கொள்வது?

நான்குபேர் சொல்வதைக் கேட்டு நீயும் உன் கணவனைப் பித்தன் என்று புறக்கணிக்கப் போகிறாயா? பித்தன் பைத்தியக் காரத்தனமாகவே ஒடச் செய்வான். அவனை இழுத்துப் பிடித்து நிறுத்த உன்னால் முடியாது. உன்னைவிட ہیeus soبلا சுபாவம் வலிமையுடையது.

அப்படியானால், நீ ஒரு மூலையில் உட்காந்து கொண்டு அழுது கொண்டிருக்கத்தான்் போகிறாயா? அல்லது அவனோடு, நீயும் ஒடுவாயா? பித்தனுக்கு ஏற்ற பித்தி ஆவாயா? குருட்டு மன்னனின் மனைவி தன் கண்களையும் துணியால் கட்டிக் கொண்டு குருடியானதுபோல நீயும் செய்வாயா?

வெளியே நீ ஆயிரம் பள்ளிகளில் படித்திருக்கலாம். ஆயினும், நீ ஓர் இந்து வீட்டுப் பெண்தான்ே! இந்து மூதாதையரின் இரத்தமே உன் உடலிலும் ஓடுகிறது. நீ இந்த வழியைத் தேர்வாய் என்பதைப் பற்றி எனக்குச் சந்தேகமில்லை.

எனக்கு மூன்று பைத்தியங்கள்

முதல் பைத்தியம் என்ன தெரியுமா? கடவுள் நமக்கு அளித்துள்ள அறிவும் - ஆற்றலும், கல்வியும் - வித்தையும், செல்வமும் - ஆண்டவனுக்கே சொந்தமானவை,

குடும்பத்தை நிர்வகிக்கத் தேவையான குறைந்த பட்சச் செலவுகள் செய்யவே நமக்கு உரிமை உண்டு. பிறகு