பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 15

இந்தப் பிரெஞ்சுப் புரட்சிக்கு மக்களைத் தயார் படுத்தி மூன்று அறிவு மேதைகளான மாண்டெஸ்கியூ, ரூசோ, வால்டேர் ஆகியோர் தோன்றியதும் இந்த பதினெட்டாம் நூற்றாண்டில்தான்்.

கி.பி. 1689 ஆம் ஆண்டில் பிறந்து 1755-ஆம் ஆண்டில் மறைந்த மாண்டெஸ்கியூ என்ற வழக்கறிஞர் சட்டங்களின் நோக்கம் என்ற நூலையும், கி.பி. 1712-ஆம் ஆண்டில் தோன்றி 1778-ஆம் ஆண்டில் உயிர் நீத்த ரூசோ என்ற அரசியல் ஞானி ‘சமுதாய ஒப்பந்தம் என்ற நூலையும் கி.பி. 1694 ல் அவதரித்து 1778-ஆம் ஆண்டில் காலமான வால்டேர் சிறந்த ஒரு பேனா வீரராகவும் விளங்கி, மத குருமார்களின் கொடுமைகளைக் கடுமையாக எதிர்த்து, மூடப் பழக்க வழக்கங்களை முடமாக்கி அங்கே எழுத்துரிமை, பேச்சுரிமைகளை நிலை நாட்டியதால்தான்், அக்கால ஃபிரான்ஸ் மக்கள் தங்கள் உரிமைகளைத் தட்டிக் கேட்கும் வீரத்தைப் பெற்ற மனிதர்களாக நடமாடி, ஃபிரெஞ்சுப் புரட்சி தோன்றிட அவர்கள் முன்னேடிகளாகத் திகழ்ந்தார்கள்.

பிரெஞ்சுப் புரட்சி 11.8.1789-ஆம் ஆண்டில் தோன்றியது. ஆறு ஆண்டுகளாக அது, ஐரோப்பா கண்டத்தையே உலுக்கிக் குலுக்கிப் பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியது. அந்த வீர வரலாறு பெற்ற ஃபிரான்ஸ் நாட்டில்தான்் நமது தெய்வத் தாயான அன்னை 1878-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 21-ஆம் நாளன்று, தெய்வீகக் குழந்தை போல, அந்த வீரம் விளைந்த மண்ணிலே அவதரித்தார்.

ஃபிரெஞ்சுப் புரட்சி உலகத்திற்கு முப்பெரும் மனித உரிமைக் கருத்துக்களை அறிவு தான்மாக வழங்கியது. அவைதான்் - மனித சுதந்திரம், மனித சமத்துவம், மனித சகோதரத்துவம் என்பவை ஆகும். அவை மனித உயிரினும் மேலான தத்துவங்கள் ஆகும்.

அந்த உரிமைகள் உதிர்த்த மண்ணான ஃபிரான்சு

பூமியிலே பிறந்த குழந்தைதான்் நம்மால் இன்றும் போற்றப்படும் ஞானக் குழந்தையான நமது அன்னை