பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி で73

கண்டும், தன் மகத்தான் விருப்பங்களின் எதிரொலியை அவளிடம் கேட்டும் அவன் இரட்டிப்பு வலிமை பெறுகிறான்.

மிருணா, எப்போதுமே இப்படித்தான்் இருப்பாயா? நான் நல்ல ஆடைகளை அணிவேன்; சுவையான உணவு உண்பேன்; சிரிப்பேன்; ஆடி மகிழ்வேன்; எல்லாவித இன்பங்களையும் நுகருவேன் என்பன போன்ற மனநிலையை உயர்ந்த மனநிலை என்று கொள்ள முடியாது.

இந்தக் காலத்தில் இந்த நாட்டுப் பெண்களின் வாழ்க்கை இவ்வாறு குறுகி இழிந்துள்ளது. நீ அதைக் கைவிடு. என்னோடு வா; கடவுட் பணி செய்ய நாம் இந்த உலகத்துக்கு வந்தவர்கள்; வா, அந்தப் பணியை நாம் தொடர்வோம்.

உன்னுடைய குணத்தில் குறை ஒன்றுள்ளது. நீ ஒரு வெகுளி, யார் எதைக் கூறினாலும் நம்பி விடுகிறாய். இதனால், உன் மனம் எப்போதும் நிலையற்று இருக்கிறது. புத்தி வளர்ச்சி பெறுவதில்லை; எந்த வேலையிலும் ஈடுபாடு ஏற்படுவதில்லை. இதைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஒரே ஒருவனின் சொல்லைக் கேட்டு ஞானம் சேகரித்துக் கொள்ள வேண்டும்; ஒரு குறிக்கோளை ஏற்று நிலை குலையாத நெஞ்சுடன் செயல்பட வேண்டும். மக்களின் வசைகளையும், கிண்டல் - கேலிகளையும் பொருட்படுத்தாமல் உறுதியான பக்தி கொள்ள வேண்டும்.

உன்னிடம் மற்றொரு குறை; உன் குறை அல்ல; அது காலத்தின் குறை. வங்காளத்தில் இப்படி ஒரு காலம் வந்துள்ளது. கம்பீரமான விஷயங்களை மக்கள் கம்பீரமாய்க் கேட்பதில்லை.

அறம், பரோபகாரம், அதிக ஆர்வம், பெரும் முயற்சி, நாட்டுயர்வு போன்ற உயர்ந்த, பெரிய விஷயங்களைக் கேலியாகவும், கிண்டலாகவும் பேசுகிறார்கள்.