பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

வெளிப் பள்ளிகளில் படித்ததால் உன்னிடமும் இந்தக் குறை கொஞ்சம் வந்துவிட்டது. நம் எல்லோரிடமும் இந்தக் குறைகள் ஓரளவு இருக்கவே செய்கின்றன. மனத்தில் பதிந்து விட்ட இந்தக் குற்றத்தை மனதாலேயே வெருட்ட வேண்டும்.

மிகச் சுலபமாக நீ இதைச் செய்ய முடியும். ஒரு முறை சிந்தித்துப் பார். பிறகு அந்தப் பழக்கம் உன்னிடம் வேரூன்றினால் உனது உண்மைச் சுபாவம் வெளியாகி விடும்.

பரோபகாரம் புரியவும், சுயநலத்தைத் துறக்கவும, உனக்குள் தீவிர முனைப்பு இருக்கிறது. சிறிது மன உறுதிதான்் உனக்குத் தேவை. நீ தெய்வ வழிபாடுகளால் அந்த மன உறுதியைப் பெற முடியும்.

எனது ரகசியம் இதுதான்். யாரிடமும் சொல்லாமல் உனது மனத்துக்குள் உறுதியான சித்தத்துடன், இவற்றைப் பற்றி யெல்லாம் யோசித்துப்பார்! சிந்தனை செய்.

அஞ்சுவதற்கு இதில் ஒன்றுமில்லை. சிந்திப்பதற்குத்தான்் பல விஷயங்கள் இருக்கின்றன. முதலில் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். நாள்தோறும் ஓர் அரைமணி நேரம் தெய்வத் தியானம் செய்ய வேண்டும். வழிபாடுகள் வடிவில் உனது வலிய விருப்பத்தை வெளியிட வேண்டும். இதனால் உனது மனம் சிறிது சிறிதாகத் தயாராகி விடும்.

நான் கணவரின் வாழ்க்கைக்கும் - நோக்கத்துக்கும், தெய்வ அருள் பெறும் நெறிக்கும் இடையூறாக இல்லாமல், அவருக்கு எந்த நேரமும் துணையாகவே இருப்பேன்! சாதனையில் ஈடுபட்டு இருப்பேன்! என்று, நீ எந்த நேரமும் எல்லாம் வல்ல கடவுளிடம் கையேந்தி வழிபாடுகள் செய்து கொண்டிருந்தாலே போதும். செய்வாயா?