பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 175

பாரத நாட்டுப் பாவையர்களது இலட்சியம், குறிக்கோள், கற்பு நோக்கங்கள் என்ன என்பதை அரவிந்தரின் இந்தக் கடிதம் ஒரு ஞான போதனை என்றே தெளிவாகத் தெரிகின்றது.

பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்துக்கள் போற்றி வரும், குறிப்பாக இந்து மங்கையர் குல மாதரசிகள் வழிப்பட்டு நடந்து வரும், பெண்ணிற்குப் பெருமை தரும் மாண்புமிகு பண்பாட்டு இலட்சியம் மேற்கண்டவை.

இந்த இலட்சியம், நோக்கம், குணங்கள், சுபாவங்கள், பண்பாடுகள் எந்த வகையிலாவது ஊனம் உற்றால், பாரத நாட்டுப் பெண்களின் பெருமையிலும் பெண்மையிலும் ஊனம் உண்டாகும்!