பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #79

நாட்கள் நகர்ந்தன: போகப் போக வேறு சில சாதகர்களும் வந்து சேர்ந்தார்கள். இவ்வாறு அதிகம் பேர், சாதகர்களாக வேண்டுமென்று வந்தவர்கள் குழு, பெருகி வந்ததால், திட்டவட்டமான ஒரு நிர்வாகத்துக்கு ஏற்பாடுகள் செய்தாக வேண்டும் என்கிற காலக் கட்டாயம் உருவானது.

மக்கள் ஒவ்வொருவராகச் சேர்ந்து கூடி பல்கிப் பல்கிச் சேர்ந்து வாழ்வதுதான்ே சேரி என்ற சொல்லுக்குரிய பொருள்? அதற்கேற்ப பாண்டிச்சேரி வந்த சாதகர்கள், மேலும் சில வீடுகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டார்கள்.

1926-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ஆம் நாள், அன்னை மீராவிடம் அரவிந்தர் ஆசிரம நிர்வாகப் பொறுப்புக்கள் முழுவதையும் ஒப்படைத்துவிட்டு, அவர் தனிமையில் யோக நிலையை நாடும் தியான ஞான மோனத்திலே மூழ்கி விட்டார்.

அரவிந்தரும் - அன்னையும் சில சாதகர்களைத் தம்மோடு இருக்க அனுமதியளித்தார்கள். ஆண்-பெண் இருபாலாருமுள்ள அவர்கள், அன்னை-அரவிந்தர் ஆகிய இருவரின் நேரடிக் கண்காணிப்பிலே சாதனைகளைச் செய்தார்கள்.

அன்னையின் பாதுகாப்பை ஏற்பவர்கள் எவரோ, எவரெவர்களுக்கு ஆன்மீக வாழ்க்கை வாழ்வதற்கான ஆர்வப் பெருக்குள்ளதோ, அவர்கள் மட்டுமே பாண்டிச்சேரிக்கு வருகை தந்து சாதகர்களாகிச் சாதனைகளைச் செய்கிறார்கள்.

ஆனால், ஒரு நிபந்தனை உண்டு. யார் யார் இந்த ஆசிரமத் தில் சாதனை வாழ்க்கையை நடத்திட முன் வருகின்றார் களோ, அவர்கள் தங்களிடமுள்ள எல்லாச் சொத்துக்களையும் அன்னையின் திருவடிகளிலே காணிக்கையாக்கி விட வேண்டும் என்பதே அந்த விதி!