பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i82 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

மிருந்தும், வேட்கையிடமிருந்தும், பாசத்திட மிருந்தும் விடுதலை பெறச் செய்கிறார்கள்.

சித்திரம் வரைதல், சிற்பங்கள் செதுக்கல், இசை பயிற்சி பெறல், நடனம் பயிலல், பக்க வாத்திய இசை போன்ற எல்லாக் கலைகளும் ஆத்மிகத் தகுதி, தரம் பெற்று விளங்குகின்றன.

உள்ளத்தின் வளர்ச்சிக்கான வசதிகள் மட்டுமல்ல; உடல் வளர்ச்சிக்கான வசதிகளும் ஆசிரமத்தில் இருக்கின்றன. ஏன் தெரியுமா?

இந்த யோகத்தில் உடல் வெறுப்புக்குரியதாக எண்ணப் படுவதில்லை அல்லவா? அதனால், உடல் மென்மையும் கட்டுக் கோப்பும் பெறுவதோடு, ஆத்மா தன்னை நன்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கு ஏற்றதாக அமைகின்றது.

ஆண்-பெண் இருபாலர்க்கும் ஏற்ற வளர்ச்சிக்கான சம வாய்ப்புகள் ஆசிரமத்தில் இருக்கின்றன. இங்கே பெண்கள் அபலைகள் என்று எவரையும் இழிவாக எண்ணுவதில்லை.

ஆசிரமத்தில் சாதாரணமான உலக வாழ்க்கைக்கு இடமில்லை. ஆணுக்கும் - பெண்ணுக்கும் இடையில் இங்கே பேதமேதும் இல்லை. இருபாலரும் அருட்டிரு அன்னையின் மேற்பார்வையில் உள்ள சாதகர்களே.

இதுவரை ஆசிரமத்தின் உள் அமைப்பு எவ்வாறு இயங்குகின்றது என்பதைப் பார்த்தோம். இப்போது, ஆசிரமத் தின் புற அமைப்பு எவ்வாறுள்ளது என்பதை அறிவோம்.

'உலகப் பொருள்களை வெறுப்பது அஞ்ஞானத்துக்கும் ஜடத் தன்மைக்கும் அடையாளம்', என்று அன்னை உபதேசிக்கின்றார்.