பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 183

உலகப் பொருட்களை நாம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அவற்றை வைத்துக் கொள்ள நமக்கு உரிமை இல்லை. பற்றுதல் இருக்கிறதே என்பதற்காக நாம் அவற்றை வைத்துக் கொள்ளக் கூடாது.

அவை ஆன்மீகச் சுடரை வெளியிடுகின்றன; தெய்விக ஒளியைக் காட்சிகளாக்குகின்றன என்பதற்காக நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆசிரமத்தில் சாதகர்கள் தங்குவதற்காக நூற்றுக் கணக்கான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளைப் பழுது பார்த்துத் திருத்திக் கட்டும் வேலை நடந்தபடியே உள்ளது ஆசிரமத்தில்.

சாதகர்கள் எவ்வளவு பேர்கள் இருக்கின்றார்களோ, அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்றவாறு புது இல்லங்கள் கட்டப்படுகின்றன.

இந்தக் கட்டடம் கட்டும் பணியைப் பல சாதகர்கள் கவனித்து வருகிறார்கள். அவர்களுடைய கண்காணிப்பில் நூற்றுக் கணக்கான பணியாட்கள் வேலை செய்து வருகிறார்கள்.

நலவாழ்வுத் துறை, தண்ணி துறை, மின்சாரத் துறை ஆகியவற்றைத் தனித் தனி துறைகள் கவனித்துக் கொண்டு வரு கின்றன. பல சாதகர்கள் தங்களது உடைகளைத் தாங்களே துவைத்துக் கொள்கிறார்கள். சலவைத் துறையையும் சிலர் நாடுவார்கள்.

சாதகர்கள் தங்கியிருக்கும் அறை எப்படி இருக்கும் என்கிறீர்களா? இதோ விவரம் :

சாதகர் அறையில் ஒரு கட்டில், ஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு துணி மாட்டும் ஸ்டாண்டு, ஓர் அலமாரி இருக்கும்.