பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

சாதகர்களின் தையல் பணியை ஒரு பிரிவு கவனிக் கின்றது; அவர்களது செருப்புக்களைப் பழுது பார்க்க, புது காலணிகளைச் செய்து கொடுக்க ஒரு துறை பணி புரிகிறது.

ஆயிரம் பேர்கள் அமர்ந்து ஒரே நேரத்தில் உணவு விடுதியில் உண்ணலாம். சாத்விகமான உணவு வகைதான்்; காரசார சுவைகள் எதையும் உணவில் சேர்ப்பதில்லை. இதோ ஆசிரமிகள் உணவுத் திட்டம் :

காலைச் சிற்றுண்டி : ஒரு கோப்பைப் பால் அல்லது கோக்கோ ஒரு பன் அல்லது மூன்று ரொட்டித் துண்டுகள்.

மதிய உணவு : சோறு ஒரு கிண்ணம்; காய்கறி வகை ஒரு கிண்ணம்; ஒரு கோப்பை தயிர்; வாழைப் பழங்கள் இரண்டு; எலுமிச்சைப் பழம்.

இரவு உணவு : ஒரு கோப்பை பால், நான்கு ரொட்டித் துண்டுகள்; காய்கறி ஒரு கிண்ணம்.

சாதகர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய தேவைக்கு ஏற்றவாறு உணவு வழங்குவார்கள். உணவு சமைப்பதும், பரிமாறுவதும், சாதகர்களே செய்வார்கள்.

உணவு விடுதிக்கே பெரும்பான்மையர் வந்து உண்பார்கள். உணவு வகைகளைத் தங்கள் இருப்பிடத்துக்கே சிலர் வரவழைத்துக் கொள்வதுண்டு.

சாதகர்கள் பாத்திரங்களை மருந்து தெளிந்த நீரில் சுத்தம் செய்து கொள்வார்கள். சுத்தமான வடிகட்டிய குடிநீரை அவர்களுக்கு வழங்குவதுண்டு.

ஆயுர்வேத முறை, ஆங்கில முறை மருந்துகள் அவர்களுக்கு மருத்துவ மனையில் வழங்கப்படும். இயற்கைச் சிகிச்சை செய்து கொள்ள அவர்களுக்கு தனியிடம் உண்டு.