பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி #7

அன்னையை ஈன்ற அன்னையின் திருக்கோயில், அவருக்கு முன்பே ஓர் ஆண் குழந்தையினையும் பெற்றளித்தது - பிரான்ஸ் நாட்டின் பூமிக்கு

நமது அன்னைக்குப் பெற்றோர் சூட்டிய திருப்பெயர் என்ன தெரியுமா? மீரா என்ற திருநாமம் ஆகும்!

இந்த மீரா என்ற திருப் பெயரில் இந்திய நாட்டு மண்ணிலும் - பக்தி மணம், ஆன்மீக ஞானம் பரப்பி மணந்து முக்தி பெற்ற ஒரு பெண் குழந்தை புகழோடு விளங்கி இருந்தது.

அந்த மீரா என்ற பெண் குழந்தையும் இந்திய மண்ணில் கிருஷ்ண பக்தையாக நடமாடி, இறை ஞானத்தை மக்களுக்குள் பரப்பி, மடாலயங்கள் நிறுவி, அறிவு போதனைகளை மக்களுக்கு ஆற்றி, பேரின்பப் பாடல்களைப் பாடி, பார்ப்பவர்களையும் கேட்பவர்களையும் பேராச்சர்யத்தில் வீழ்த்தி, கிருஷ்ண கடாட்சத்தில் பேரின்ப வீடு பெற்று, முக்தி அடைந்தவள் ஆவள்: அவரது வரலாற்றை ஓரளவாவது நாம் தெரிந்து கொண்டால்தான்், நமது அன்னை பாரீஸ் நகரிலே அவதாரம் எடுத்த இந்தியத் தெய்வக் குழந்தையின் மறு பிறப்போ என்று எண்ணிப் பார்த்திடும் சிந்தனைப் பேறை நமக்கு வழங்குவதைக் காணலாம்: இந்தப் புத்தகத்தின் இறுதி அத்தியாயமாக அந்த வரலாற்றைக் கொடுத்துள்ளோம். படித்து ஒப்பு நோக்கி உணர்க.

ஃபிரான்ஸ் நாட்டு மீராவின் தாய் - தந்தையர் அளவற்ற அன்போடும், ஆர்வத்தோடும், ஆசையோடும், பண்போடும் அக் குழந்தையை வளர்த்தார்கள். ஆனால், அன்னை பெரு மாட்டியின், அன்னையார் தான்் பெற்ற அந்த மீரா குழந்தையைக் கண்டிப் போடும், கட்டுப்பாட்டோடும் வளர்த்தார்:

காரணம், தாயைப் போல பெண், நூலைப் போல சேலை என்பது கிராமியப் பழமொழி, அதற்கேற்ப, அன்னை அவர்களின் அன்புத் தாயார், எந்த ஒரு விஷயத்திலும் கண்டிப்பானவராகவே இருப்பவர் கட்டுப்பாட்டோடு குடும்பம் நடத்துபவர். அதனால்