பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 183

வதான்ால், வேதம், உபநிடதங்கள் ஆகியனவற்றில் மிக ஆழ்ந்த ஆய்வு நடைபெறுகின்றது.

ஆசிரமத்தில் உடலோம்பல் பற்றி மிகுந்த கவனம் காட்டப் படுகின்றது. ஆத்மாவின் திவ்ய ஜோதியைத் தாங்குவதற்கான கட்டுக்கோப்பு அமைந்திட பெருமுயற்சி செய்கிறார்கள். உடல் உறுதியும்; அதே நேரத்தில் மென்மையும் வாய்ந்ததாக உருவாக்கப்படுகின்றது.

உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல மொழிகள் பேசும் மக்கள்; பாண்டிச்சேரி உலகக் கல்வி நிலையத்திற்கு வருகை தந்து தங்கிப் பயன் பெறுகிறார்கள்.

நாற்பது ஆண்டுகள் தனிமையில் இருந்தே அரவிந்தர் செய்த சாதனைகளின் பயனை, மிக உயர்ந்த முறையில் உருவாக்கிட இந்த ஆசிரமத்தில் முயற்சி மேற்கொள்ளப்

படுவதைக் காணலாம்.

மக்கள் குலத்தின் ஒற்றுமை, ஆத்மாவை அடிப்படையாகக் கொண்டதுதான்் என்பது அரவிந்தரின் வாக்கு.

இந்த உலகக் கல்வி நிலையம் ஒரு தொழிலாக இங்கே நடத்தப்படவில்லை. ஏனென்றால், "நான் கல்வியை வாணிகப் பொருளாக ஆக்கமாட்டேன்' என்பது அன்னையின் வாக்கு.

உலக விவகாரங்களை அரவிந்தர் வெறுப்பவரல்லர். அவருடைய பூரணயோகம் உலகம் உயர்வதற்கான நாட்டம் கொண்டதாகும்.

அதனால்தான்், உலகத்துக்கு எது நன்மை, எது தீமை என்பதை அவர் அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்.

இரண்டாவது உலகப் போர் நடைபெற்றபோது, ஆரம்பத்தில் நேச நாடுகள் என்பவை தோல்விகளையே சந்தித்து