பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி # 9

இரண்டு மணி நேரமாக வாதாடியும் அந்தப் பிள்ளைகள் கட்டுப்பாடாக வேண்டவே வேண்டாம் அந்த உணவு என்று கூறிவிட்டு, உணவுண்ணும் மேசையைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்தான்ே! அதனால், குழந்தைகள் வைராக்கியம் தளர்ந்து வீழ்ந்தது. கவளம் கவளமாக அதே உணவை உருட்டி உருட்டி அவசரம் அவசரமாக உண்டார்கள் - பாவம்:

இவ்வாறான சிறு சிறு நிகழ்ச்சிகள் மூலமாக மீரா, தனது தாயாரிடமிருந்து கட்டுப் பாட்டினைக் கற்றுக் கொண்டார். அப்போது என்ன வயது தெரியுமா மீரா என்ற சிறுமிக்கு? ஏறக்குறைய ஏழு வயது!

அன்னையின் சிறு வயது குழந்தை நிலையைப் பற்றி மகரிஷி அரவிந்தர் அறிவித்தபோது குழந்தை பருவத்தில் கூட அன்னை மற்ற குழந்தைகளைப்போல சாதாரண நிலையில் இருக்க வில்லை. உயர்ந்த ஒரு நிலையிலேதான்் திகழ்ந்தார் என்கிறார்.

சிறு குழந்தையாக இருக்கும் போது அன்னை எழுதப் படிக்க, சிந்திக்கக் கருத்து எழுதவதற்கு முன்பேயே, அதாவது நான்கு வயதாக அவர் இருந்த நேரத்தில், தனது தந்தையும் தாயும் விலை கொடுத்து வாங்கிக் கொடுத்த நாற்காலியில் அமர்ந்து கொண்டே தியானத்தில் ஆழ்ந்து விடுவார் என்றால், எந்த அளவுக்கு அவரை ஆன்மீக உணர்வு ஆழமாகப் பற்றியுள்ளது பார்த்தீர்களா?

சிறு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அந்த அன்னை என்ற குழந்தை தியானிக்கும் போதெல்லாம், ஆன்ம ஒளி தனது இதயத் தில் ஊடுருவிப் பாய்வதைக் கண்டுணர்வாள்! இந்த அனுபவம், பழுத்த ஞான யோகிகளுக்குள் மட்டுமே நடைபெறும் அரிய செயலாகும்!

ஆன்ம ஒளி இவ்வாறு தனது மனத்துள் வெள்ளம் போல் பாயும் போதெல்லாம், இந்த உலகத்தில் ஏதோ ஒரு செயற்கரிய