பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

செயலைச் செய்திட இறைவன் நம்மைப் பிறப்பித்துள்ளார் என்பதை, அடிக்கடி அந்தக் குழந்தை தான்ே புரிந்துக் கொள்வாள்!

தனது குழந்தையை சர்க்கசுக்குப் போகலாம் வா என்று தந்தை ஒரு நாள் அழைத்த நேரத்தில், வேண்டாம், நான் இப்போது அதைவிட ஒரு முக்கியமான வேலையில் கவனம் செலுத்துகிறேன் என்று அன்னை கூறிவிட்டார்.

தன் வயதை ஒத்தக் குழந்தைகள் வீடேறி வந்து. மீரா, வா விளையாடலாம் என்று அழைத்தால், இல்லை, நான் இங்கேயே மகிழ்ச்சியோடு இருக்கிறேன். நீங்கள் சென்று விளையாடுங்கள், என்று சொல்லி அந்தக் குழந்தைகளை அனுப்பி விடுவார்.

மீரா, தனது ஐந்தாவது வயதிலேயே ஆன்ம சோதனையில், ஆன்ம ஞான வாழ்க்கையில் செயல்படத் துவங்கி விட்டார்!

தான்் பெற்ற அந்தச் சின்னஞ் சிறு குழந்தையின் ஆர்வத்தையும், மன ஆழத்தில் பதிந்து விட்ட ஆன்மீகக் கருத்துக்களின் வளத்தையும் கண்ட தாயார், "என்னடி அம்மா, என்னமோ நீ தான்் இந்த உலகத்தைத் தாங்க வந்த பூமாதா போல உன் முகத் தோற்றத்தைப் பார்த்தால் தெரிகிறதே, என்று கேட்டார் . : فقلنا بنيني

கேட்ட கேள்வியின் உட்பொருனை எண்ணிப் பாராமல், தனக்கே உரிய இயல்பான இயற்கை சுபாவத்தோடு, ஆமாம்! என்று உடனே கூறிவிடுவாள் அந்தக் குழந்தை இது போன்ற இக்கட்டாக வரும் சில நேரத்துப் பதில்களைக் கண்ட பெற்றோர்கள், இது என்ன வயதுக்கு மீறிய பதிலாக இருக்கிறதே என்று தமக்குள் திணறித் திக்கு முக்காடிப் போவார்கள்!

பள்ளிக்கு அனுப்பினார்கள் பெற்றோர்கள் மீராவை, சில நாட்களில் அந்தப் பெண் தனது நடத்தையாலும், புத்திக் கூர்மை யான செயல்களாலும், கேள்விகளைக் கேட்கும் ஆசான்களுக்கே அறிவுக் குறிப்புக்களை வழங்கும் நுட்பத்தாலும், தன்னுடன் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள், இடையே பழகும் பழக்க