பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 23

மீராவை விட ஆறு வயது அதிகமுள்ள ஒரு பையன், பள்ளி மாணவிகளை எந்த வித ஒரு காரணமும் இல்லாமல் அவர்களைத் தொந்திரவு செய்து கொண்டே இருப்பான்! அதாவது கேலி, கிண்டல், வேடிக்கை விளையாட்டுகள் மூலமாக

அந்தப் பதின்மூன்று வயது சிறுவன் மீராவிடம் குறும்புத் தனம் செய்தான்். அதைப் பொருட்படுத்தாத அவள், "கொஞ்சம் சும்மா இருடா என்று பலமுறைக் கூறினாள். கேட்டானில்லை அவன், தொடர்ந்து குறும்பாடிக் கொண்டே இருந்தான்்.

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா? மீரா உருவத்தில் கரும்பு போன்றவள் மென்மை வயதில் நாணல் போல பளபளப்பானவள், மென்மை வாய்ந்த மீரா அந்தப் பெரிய பையனை அப்படியே அலாக்காகத் தூக்கி, ஒரு சுழற்றுச் சுழற்றித் தரையில் வீசினாள் - மகாபாரத விராட பர்வதத்தில் பீமன் போர்க் களத்தில் வீசி எறிந்ததைப் போல! அதற்குப் பிறகு அந்தக் குறும்பன் மீராவிடம் குறும்பாடுவதை விட்டொழிந்தான்்

மீரா தந்தை, வங்கி ஒன்றில் பணியாற்றுபவர்; வாடிக்கை தாரர்களுக்குப் பதில் சொல்லிச் சொல்லி ஏற்பட்ட சலிப்பால், அவர் மூல நோய்க்காரனைவிட அதிக எரிச்சலும், கோபமும் உடையவராக இருந்தார்.

மீராவின் தமையன் மாலையில் நேரம் கழித்து வருவான். அதனால், அவருடைய மகன் மீது பிரம்பு அடிகள் ஏரளமாக விழும். அடிக்கடி இவ்வாறு தனது தந்தை தமையன் மீது பிரம் படித் தாக்குதல் நடத்துவது மீராவுக்கு அருவருப்பாக மட்டு மன்று; தந்தை போக்கு மீது வெறுப்பும் கொண்டவராக இருந்தார். மீரா தந்தையின் சினம், ஒரு நாள் வரம்பு மீறி விட்டது. அண்ணனைப் பிரம்பால் அளவுக்கு மீறி விளாசினார் தீவிரமான கோபம் தந்தைக்கு தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தார். தனது தமையனால் வலி பொறுக்க முடியாமல் திணறித் தவிப்பதைக் கண்ட மீராவுக்கு, தான்் ஆடா விடினும் தனது சதை ஆடும் என்பார்களே, அதற்கேற்ப, மீராவும் துடித்துப் போய் விர்ரென்று ஓடி அண்ணனுக்கு முன்பாக குறுக்கே நின்று