பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

தடுத்தார் அடிகளை தொடர்ந்து அடிகள் அண்ணன் மீது ജുബ്ബ சுழன்று விழுந்து கொண்டே இருப்பதைக் கண்ட மீரா, "அப்பா' என்று உரத்தக் குரலில் கத்தினார்: "அப்பா, நீங்கள் அடிப்பதை நிறுத்தா விட்டால் நான் ஒரு நிமிடம் கூட இப்படிப்பட்ட வீட்டில் தங்க மாட்டேன்' என்று கத்தினார்.

மகளின் கம்பீரமான, வலுவான, உறுதியான, தடித்தக் குரலைக் கண்ட மீராவின் தந்தை, ஒரு கணம் ஆடிப் போய் அசந்து, அதிர்ந்து நின்று விட்டார்.

அன்று தரையில் போட்டு விட்ட பிரம்பை, அவரது தந்தை சாகும் வரை தொடவே இல்லை! அப்போது மீராவுக்கு வயது ஆறோ, ஏழோதான்் இருக்கும்.

சாதாரனப் பிறவி அல்லர் மீரா அவளது பதினொன்றாம் வயதில் துவக்கிய ஆன்மீக ஞானத்தால், பதின்மூன்றாம், பதினைந்தாம் வயது வரம்புக்குள் அவர் ஆழ்ந்த அனுபவங் களைப் பெற்றார்.

அதற்குக் காரணம், பல நாட்டின் ஆன்மீக அறிவு நூல்களைப் படித்ததால் என்றால் மிகையன்று. ஆழ்ந்த அந்த ஆன்மீக ஞானத்தின் முதிர்ச்சியால், மனக் கட்டுப்பாட்டுத் தவத்தால், வேள்வியின் அனுபவத்தால், எந்தெந்த பெரியார்கள் எப்படி எப்படியெல்லாம் முயன்று ஆன்மீகத் துறையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பாரீஸ் நூல் நிலைய ஞானச் சுவடிகளைக் கற்றுத் தெளிந்த அறிவுச் சுடர்களைத் தனது சிந்தையில் தேக்கிக் கொண்டதுதான்்.

கடவுள் தரிசனம் எவ்வாறு கிடைக்கும் என்பதற்கான புலன் கட்டுப்பாட்டுச் சித்தர்கள் செயலையும் ஒருவாறு உணர்ந்தார். அதுமட்டுமன்று; இறை உணர்வை, அதன் சித்தாந்தத்தை, உண்மைகளை நம் முன்னும், நமது எல்லாச் செயல்களிலும், இந்த உலக வாழ்க்கையின் சம்பந்தப்பட்ட அனைத்துக் களங்களிலும் கொண்டு வந்து விளங்கச் செய்ய முடியும் என்பதும், அப்போதே மீராவின் அறிவுக்குப் புலனான ஞானமாயிற்று எனலாம்!